அன்னமய உடல் பிராணமய உடலின் காரியமாகும். பிராணமய உடலோ, அசுத்த மனோமய உடலின் காரியம். அதற்குக் காரணம் சுத்த மனோமய உடல். அதற்குக் காரணம் ஆனந்த வடிவாய சோதி. அதற்குக் காரணம் சூனியம். சூனியத்திற்குக் காரணம் விஷ்ணுவாகிய சச்சிதானந்த மகாமையம். இதுவே பிரபஞ்சத்திற்கும் பொருந்தும்