அது அனாதியான காரணம். காரணன் என்று அவனை அழைத்தார் மகரிஷி. அவன் குறைவுபடாத, நிறைவுபடாத பரிபூரணன். பூரணன் என்றார் மகரிஷி. அவன் ஒளியும் இருளும் அல்லாதவன். அவனை ஜோதிமயன் என்றார். அப்படி லட்சம் பெயர்களைக் கூறிய பிறகு, இப்பெயர்களால் தொடப்படமுடியாதவன் அநாமன் என்றார். மனித மனதால் எந்நிலையிலும் வரைறுக்கப்பட முடியாதவன், அநிர்வசநீயன் என்றழைத்தார்.