More on this book
Community
Kindle Notes & Highlights
உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாகவே பரம ஞானம் அடைய முடியும்.”
“காவியம் எழுதாதவர் இங்கு குறைவு. இங்கு அதை யாரும் படிப்பதில்லை. பொன்தகட்டில் பொறித்திருந்தால் மதிப்பார்கள்.”
தெளிவாகச் சொல்லப் போனால் உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான ஞானம் மட்டுமே உண்மை.
“பெருமாள் விளக்கமல்ல, விளக்கத்தை ஒத்திப் போடும் முயற்சிதான்.”
பிரபஞ்சம் தற்செயல்களின் பிரவாகம்
“மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்.”
தருக்கத்தின் முதல் கதிர் பட்டதும் உலகம் பிரிவுபட ஆரம்பிக்கிறது. தருக்கம் என்பதே ஞானம். தருக்கம் வளரும்தோறும் உலகம் பிளவுபட்டு, பிளவுகள் பின்னிச் சிக்கலாகி, தோற்றம் தருகிறது. உடைப்பதும் பிரிப்பதும் பெயரிடுவதும் தொகுப்பதும்தான் தருக்கத்தின் போக்கு.
படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது.”
கருணை உள்ளவர்கள் மோசமான ஆட்சியாளர்கள். அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அகங்காரிகளே மிகச் சிறந்த ஆட்சியாளர்கள். கருணையுள்ள அரசு என்ற ஒன்று இல்லை போலும்.”
“ஞானத்தின் படியேறிச் சென்றும் பரிபூரணத்தை அடையலாம். ஞானத்தை ஒவ்வொன்றாக உதிர்த்தும் அதே பரிபூரணத்தை அடையலாம்.
படிப்படியான அறிதல் எல்லாம் அறிவிலிருந்து விலகிச்செல்லுதல் மட்டுமே. அறிந்தபின் எல்லாமே வேறு. அறிந்தபின் ஏதும் இல்லை.
பூரணம் அது. பூரணம் இது. பூரணத்திலிருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பு பூரணமே எஞ்சி நிற்கிறது.
விஷ்ணுவே சத், மீதியெல்லாம் அசத். இதுதான் அக்னிதத்த மகரிஷி இங்கு நிலைநாட்டிய ஆதாரம்.
“இந்த ஒவ்வொரு தரிசனமும் ஒரு வகையான மனத் திறப்புகள். ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களுக்கு வாழ்வின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிகழ்ந்தவை. அதை அவர்கள் தங்களால் முடிந்தவரை பிறருக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
நியாய தருக்கம் மூலம் எந்தத் தரிசனமும் தோற்கடிக்கப்படுவதுமில்லை. வெற்றி பெறுவதும் இல்லை.
வன்முறையின் உச்சமான பேரமைதி நிலையை அடைந்தவர்கள் இவர்கள்.
“அடக்குதல் என்பது ஒத்திப்போடுதலேயாகும். நிரந்தர வெற்றி என்பது கடந்து செல்லல்.
ஓர் உயிரின் அல்லது பொருளின் தனித்தன்மை என்பது இன்னொரு பொருளின் மீது அது ஏற்படுத்தும் விளைவேயாகும்.
“சுடாத தீ உண்டா?” “உண்டு, நீரின் ஆத்மாவிற்கு.”
ஆகவே ‘ஞானம்’ என ஒன்று இல்லை. ‘எனது ஞானம்’ என்பது மட்டுமே உள்ளது.”
துக்கத்திலிருந்து மீள எங்கள் அருகர்கள் தூய தரிசனம், தூய ஞானம், தூய வாழ்வு என்று மூன்று அடிப்படைகளை வகுத்தளித்தனர். அகங்காரத்தைக் கொன்றாலொழிய தூய பார்வை இல்லை.
ஐந்து மகாவிரதங்கள் மூலம் ஆத்மாவையே புலன் ஆக்கலாம். அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிகிரகம், பிரம்மசரியம் என்பவை அவ்விரதங்கள். மகத்தான கருணையை இவை மனதில் வளர்க்கும்.
நீரின் ஆதிஇயல்பையும் ஒப்பியல்பையும் அறிய சத்காரியவாதம் பயன்படும். நீரை அறியவே அது பயன்படாது.”
எதைச் சார்ந்து பிரபஞ்ச மகாவடிவம் உருவாகியுள்ளதோ அதுவே சத். அதுவே பிரம்மம். அதுவே ஆதிகாரணம்.
அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் ஆத்மாவுமே சத் என அறிவான். ஆத்ம தரிசனம் பிரம்ம தரிசனமேயாகும். ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது. பனித்துளிகள் எல்லாமே சூரியனைப் பிரதிபலிக்கின்றன. ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பேயாகும்.”
ஆத்ம தரிசனம் பிரம்ம தரிசனமேயாகும். ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது. பனித்துளிகள் எல்லாமே சூரியனைப் பிரதிபலிக்கின்றன. ஆத்மா பிரம்மத்தின் பிரதிபலிப்பேயாகும்.”
உண்மையில் கணிதம் என்பது மாயையை மாயையால் அளவிடும் முயற்சியாகும்.”
“மரணம் என்பது பிறப்புச் செயலின் மறுநிகழ்வு என்கிறது ஆயுர்வேதம்”
முளைக்கும் ஒவ்வொரு செடியும் வேரை நிராகரித்தபடிதான் மேலெழுகிறது. அதே சமயம் அது வேரை நம்பியும் இருக்கிறது.
அறிந்தவை, அறிபவை, அறியப்படப்போகிறவை என்று காலம் மூன்று எனில் அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்க காலம் ஒடுங்குமா?
“சந்திரரே இப்போது படுகிறது. தத்துவம் பொய்யல்லவா? அது ஒரு மானுட ஒழுங்கு. அந்த ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட பிரபஞ்சப் பேரொழுங்கை இந்த ஒழுங்கு மூலம் அறிவது சாத்தியமா? தத்துவத்தின் சிகரநுனியில் ஒரு பாதத்தை ஊன்றமட்டுமே இடம் இருக்கிறது. மறுபாதம் வெளியில் துழாவித் தவிக்கிறது.
மெய்ஞானம் சுதந்திரத்திலேயே உள்ளது, தர்க்கம் என்பது தளை.
ஒருவேளைச் சோற்றுக்காக சகோதரன் கழுத்தை அறுக்கத்தயங்காத மனிதர்களின் கண்களிலிருந்துதான் என் மெய்ஞானத்தைக் கற்றேன்.
“ஒரு சொல் மௌனத்திற்குத் திரும்புவது போல” என்றார் ஆரியதத்தர்.
தரிசனம் என்பது பசுமரத்தில் அறையப்பட்ட இரும்பு ஆப்பு. தன் உயிராலும் உதிரத்தாலும் மரம் அதைக் கரைக்கிறது. தழும்பு மட்டும் எஞ்சுகிறது.”
“இல்லை. அறிந்ததைக் கூறும் முறையில் மட்டும்தான் தருக்கம் வருகிறது. தருக்கம் மூலம் எதையும் அறிய முடியாது.”
“தரிசனம் என்பதே அதருக்க நிலையில் உள்ள ஒன்றுதான்.
“இனி நீ கற்றவற்றை உதறு. எது கற்கிறதோ அதை அறிய முயல்க.”
இதுவரை நீ பார்த்தது உன் மனம் வெளியிடும் எண்ணங்களைத்தான்.
அதுதான். மரணம் என்பது இரண்டு பிரிவு. பிறிதின் மரணம், தன் மரணம். பிறிதின் மரணம் எவருக்கும் ஒரு பொருட்டல்ல, அது மரணமேயல்ல. அது ஓர் இழப்பு. இழப்பின் தன்மையைப் பொருத்து துக்கம். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று எதுவுமில்லை. மரணம் என்பது தன் மரணம் மட்டுமே. அது
இலைகள் மலர்களாயின. மலர்கள் கனிகளாயின. கனிகள் விதைகளாயின. விதைகளில் எல்லாம் விஷ்ணு குடியிருந்தார். விஷ்ணு மழையானார். விஷ்ணு முளைத்தார். விஷ்ணு வனமானார்.