விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate it:
7%
Flag icon
பிறர் பார்வையில் நான் என்பது நான் கொள்ளும் பிரமையன்றி வேறல்ல.
11%
Flag icon
ம். இது ஒன்றும் பிழை இல்லை. ஆனால் சரியும் இல்லை.”
11%
Flag icon
ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே...”
14%
Flag icon
நம் உடலை நாம் மதித்தால்தான் அதற்கு பிறரும் மதிப்புத் தருவார்கள்.”
18%
Flag icon
தனிமை! தனிமையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்று இல்லாத, சமரசம் இல்லாத தனிமை. இந்தத் தனிமையை இம்மிகூட மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்பத்தான் கவிதை, காமம், உறவுகள், சமூகம், தத்துவங்கள் எல்லாமே. ஆம்.
18%
Flag icon
உணர்ச்சி தற்காலிகமானது. அதை மறுக்கவில்லை. பெருந்தச்சன்
18%
Flag icon
இரக்கம் என்பது ஆணவம் மிக்க வார்த்தை.
19%
Flag icon
நமது விருப்பமும் நமது தேவையும்தான் நீதியையும் அநீதியையும் உருவாக்குகிறது. மாபெரும் நதி ஒன்றுக்காக இழைக்கப்படும் சிறு அநீதி உண்மையில் நீதியின் ஓர் அம்சம்தான் என்றேன்.
19%
Flag icon
உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாகவே பரம ஞானம் அடைய முடியும்.”
28%
Flag icon
அவள் அறிந்திருக்க மாட்டாள். அவளுடைய ஆத்மா அறிந்திருக்கும். அது அவளை அவளுக்கே கேட்காத குரலில் எச்சரித்திருக்கும். ஆத்மாவின் குரலைக் கேட்க அதற்குரிய தருணம் வாய்க்க வேண்டும்.
29%
Flag icon
அவர்கள் மனம் சமநிலைப்படும்போது எல்லாம் புரியும்”
29%
Flag icon
என்னை நீ உயர்ந்த விஷயங்களில் மட்டும் புலன்களை லயிக்க விட்டுள்ள கனவுலகவாசி
29%
Flag icon
உன்னால் என்னிடம் உன் மனதின் எந்த மூலையையும் மிச்சம் வைக்காமல் பழக முடியுமா?”
32%
Flag icon
மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்.”
34%
Flag icon
செத்துப்போன பிறகும் பார்க்க விரும்பி, கண்களை கல்லில் வடித்துவிட்டுப் போன மூதாதையர்கள் அவர்கள்.
34%
Flag icon
ஆனால் எனக்கு ஓர் உரிமை உள்ளது, கனவு காணும் உரிமை. அதை யாரும் எதவும் செய்ய முடியாது. அக்கனவும் நானும் ஒருபோதும் பிரியமுடியாது.
34%
Flag icon
உன் ஞானம் வனாந்தரத்தில்
34%
Flag icon
சிக்கியவன் சுமக்கும் தங்கம்போல உன்னை அழுத்தும். கீழே விழுந்து, தாக நீர் கேட்டு நீ கைநீட்டும் போதுதான் அதன் பாரம் என்ன என்று உனக்குப் புரியும்.
36%
Flag icon
உடல் விளக்கு, உயிர் நெய், ஞானம் சுடர். நெய் தீர்ந்து விளக்கு மண்ணாகி விடுகிறது.”
36%
Flag icon
மனங்களை வசப்படுத்துவதில் உங்கள் மார்க்கம் பூரண வெற்றியைச் சாதித்திருப்பதை அறிவேன்.” “மனநிர்வாகம் எங்கள் மார்க்கத்தில் மிகவும் பிந்தி வந்து சேர்ந்த ஒன்றுதான்.
36%
Flag icon
“படிப்பினால் என்ன பயன்? அது இன்னொருவனின்
36%
Flag icon
ருவனின் தருக்கம். உங்கள் தருக்கம் நீங்கள் கொள்ளும் மனப்பயிற்சி மூலமே கிடைக்கும்.”
37%
Flag icon
இயற்கையின் நியதி போலும் அது. படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது.”
39%
Flag icon
“நான் அதிகம் சாப்பிடுவதில்லை. உடல் உழைப்பு குறைவு. வியூகம் வகுக்கும். சத்திரியனுக்கு ஏடுகளே உணவு, ஞானமே வாள் என்பார் என் தாத்தா.
42%
Flag icon
கருணை உள்ளவர்கள் மோசமான ஆட்சியாளர்கள். அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அகங்காரிகளே மிகச் சிறந்த ஆட்சியாளர்கள். கருணையுள்ள அரசு என்ற ஒன்று இல்லை போலும்.”
42%
Flag icon
“நீங்கள் என்னை மனிதப் பிறவியாகக் கருதியதில்லை. உங்கள் உடலில் ஓர் உறுப்பு போல, சுட்டுவிரல் போலக் கருதினீர்கள்.
46%
Flag icon
“நான் என்ன விற்பவள்தானே? உடலையும் மனதையும்.” “அதற்காக ஆத்மாவையும் விற்பதா?”
49%
Flag icon
எந்த மனிதப் பிறவியும் என்னைவிட அதிக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவில்லை. எந்த வாழ்வையும்விட என் வாழ்வு மேலானதுமில்லை.”
56%
Flag icon
“சகல பிரம்மாண்டங்களையும் என்னுள் நானே ஏந்துகிறேன்.”
56%
Flag icon
“சப்த உலகங்களும் மனித உடலில் உள்ளன. காணும் ஜட உலகமே அன்னமய கோசம். காணாத புவர்லோகமே பிராணமய கோசம். ஸுவர்லோகம் அசத்தமனோமய கோசத்தாலானது. ஜனர்லோகம் சுத்தமனோமய கோசத்தின் விஸ்வரூபத் தோற்றமேயாகும். தபோலோகம் ஆனந்தமய கோசமேயாகும். பிரம்மலோகம் சின்மய கோசத்தினாலானது. உள்ளுறையும் சதானந்தமய கோசமே வைகுண்டலோகம். ஏழு பிரம்மாண்டங்களும் மனித உடலில் ஏழு நிலைகளுக்குச் சமம். ஒவ்வோர் அணுவும் மனித உடலின் அதே வடிவில்தான் உள்ளன. மனித உடல் பிரபஞ்சமேதான். அதன் ஒவ்வொரு பரமாணுவும் பிரபஞ்சமே. எனவே மனிதனே பிரபஞ்சங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்.”
56%
Flag icon
“இருப்பதைக் கண்டடைவதெப்படி அடைவது ஆகும்?”
56%
Flag icon
ஏனெனில் அடையாளங்கள் நிரந்தரமற்றவை. நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்துகொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப் பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப் பிடித்துத் தூக்கி கண்களைப் பார்த்துச் சிரிக்கும். அப்போது அவன் உடைந்துபோய் அழுகிறான். நல்ல வேளை, அதிகம் அழச் சந்தர்ப்பம் இருப்பதில்லை.”
56%
Flag icon
மகத்தான வெறுமையின் கீழ் நில். மண் மீதன்றி வேறு
56%
Flag icon
எதன்மேலும் நிற்காதே! வானமன்றி வேறு எதன்கீழும் நிற்காதே. காசியபா, சீடா அனைத்தையும் ஜீரணம் செய். உன்னில் தருக்கமெனும் நெருப்பு எரியட்டும். நெருப்பு எல்லாவற்றையும் உண்ணும். உண்ண எதுவுமின்றி ஆகும்போது தானும் அழியும். அக்னியே ஸ்வாகா”
65%
Flag icon
கண்களை அரைவாசி மூடி, மூக்கு நுனியைப் பார்த்தான். “கண்மணிகள் மனமெனும் பட்டத்திலகட்டப்பட்ட நூல்கள். கண்மணிகள் அசையாத நிலையே மனம் அமைதியடையும் நிலை.”
69%
Flag icon
வேதம் ஞானமெனில் அந்த ஞானம் விவாதத்துக்குரியதேயாகும். ஞானமல்லவெனில் அதனால் பயில்பவர்களுக்குப் பயன் ஏதும் இல்லை. கற்பவன் கடந்து செல்லமுடியாத நூல் ஏதும் இல்லை.”
69%
Flag icon
இருப்பது எல்லாமே பிறந்திருக்க வேண்டும். நிகழ்வது எல்லாமே தொடங்கியிருக்க வேண்டும். எல்லாமே முடியவும் வேண்டும்.”
69%
Flag icon
நாம் அறிந்தவற்றிலிருந்து அறிய முடியாதவற்றுக்குச் செல்லவே முயல்கிறோம். அறியாதவற்றிலிருந்து அறிய முடியாதவற்றுக்குப் போவது எங்ஙனம்?”
69%
Flag icon
அழிவற்ற ஒன்று எந்நிலையிலும் அதுவாகவே இருக்கும். இன்னொன்றாக மாறாது. பதி அழிவற்றது என்றால் அது எதையும் உருவாக்கவில்லை. அழிவுடையது என்றால் இப்போது அது இல்லை.
71%
Flag icon
சத்வ குணமுடையவன் பிராமணன். ரஜோ குணமுடையவன் சத்ரியன். தமோ குணமுடையவவன் வைதியன். முக்குணங்களும் இல்லாத மிருகவடிவினன் சூத்திரன்.
73%
Flag icon
பேசும் சொற்களுக்கு மதிப்பு வேண்டுமெனில் மிகக் குறைவாகவே அவை பேசப்பட வேண்டும்.
87%
Flag icon
உடலாலும் மனதாலும் போராட்டம். வென்றவர்கள் தோற்றவர்களைத் தின்கிறார்கள். தோற்றவர்கள் வயிற்றைக் கிழித்து வெளிவருகிறார்கள்.
94%
Flag icon
“அழகு என்பது ஒரு மனநிலை. என்றைக்காவது அந்த மனநிலையை நீ கூர்ந்து கவனித்ததுண்டா?”
94%
Flag icon
அழகனுபவம் என்பது சுயமறுப்பு. அழகின் உச்சம் என்பது எங்கு அவ்வழகை அனுபவிப்பவன் முற்றிலும் இல்லாமல் ஆகிறானோ அந்தத் தருணம் மட்டுமேயாகும்.”
94%
Flag icon
ஆத்மா இன்னோர் உடலைத் தேடிச்செல்கிறது. எதிர்ப்படும் ஒவ்வோர் உறவு வழியாகவும் ஆத்மா இன்னோர் உறவைத் தேடிச்செல்கிறது. எதிர்ப்படும் ஒவ்வோர் அழகு வழியாகவும் ஆத்மா இன்னோர் அழகைத் தேடிச்செல்கிறது— என்கிறது பிங்கல சூத்திரம். பிங்கலரின் மகாயோக ரத்னமாலா நாம் இப்பிரபஞ்சத்துடன் கொள்ளும் உறவை அறிய ஆகப் பெரிய வழிகாட்டியாகும்.”
94%
Flag icon
“புணரும் எல்லாப் பெண்களிலும் இவளுடைய முழுமையைத் தேடுகிறேன்.
94%
Flag icon
என்னை அறியாது இனி எதையும் அறியமுடியாது என்று உணர்ந்தேன்.
94%
Flag icon
அந்தத் தருணம் முன்பே தீர்மானிக்கப்பட்டது போலப் பட்டது.
95%
Flag icon
ஓர் ஊசல். அதன் ஒரு திசை இந்தத் தருணம். மறுதிசையில் காட்சி மாறியபடியே உள்ளது.”
96%
Flag icon
நினைவுகளை முழுமையாக காலம் விழுங்கிவிடப் போகிறது. இல்லை, அவை சொல்லில் மீதியிருக்கும்.
« Prev 1