“அடக்குதல் என்பது ஒத்திப்போடுதலேயாகும். நிரந்தர வெற்றி என்பது கடந்து செல்லல். காட்டு வழி செல்கிறோம். புலிப் பாதத்தடத்தைக் கண்டு பயந்து மரத்தின்மீது ஏறியமர்தல் தப்பும் வழியல்ல. பாதத் தடத்தை ஆராய்ந்து புலி போன திசையை அறிந்து, எதிர்வழி செல்லலே நிரந்தரமான தப்பும் வழியாகும். புலி பற்றிய ஞானமே புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கும் வழி.”