அஜிதன் புன்னகை புரிந்தான். பவதத்தரின் கண்களுக்குள்ளிருந்து கூரிய சர்ப்பநா துடித்து அவன் கண்களைத் தொட்டு மீண்டது. இந்த விவாவத்தில் அவன் பவதத்தரின் அதே பாணியை மேற்கொண்டான். எதிர்த் தரப்பின் தரிசனமையத்தை முற்றிலும் புறக்கணித்து அவற்றின் தருக்க அமைப்பை மட்டும் எதிர்கொண்டான். தருக்கம் தன் தரிசனத்தின் கவித்துவ மையம் நோக்கி நகரும்தோறும் காலிடறத் தொடங்கும். எனவே எதிராளியை இடைவிடாது மையம்நோக்கி இழுத்தான். பவதத்தர் தன் எச்சரிக்கையை எதனாலோ இழந்து, தன் தரப்பின் கவித்துவ முரணை மெல்லத் தொட்டு, சக்கரவாள ரேகா நியாயப்படி தருக்கப் பிழை செய்துவிட்டார். அது ஓர் உத்தியா என அவன் அகம் எச்சரிக்கை கொண்டது. ஆனால்
...more

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)