விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate it:
7%
Flag icon
“அக்னிதத்த மகரிஷியின் ஸ்பரிசம் ஞானத்தின் திறவுகோலாயிற்றே!”
7%
Flag icon
“சஞ்சலம் மிக்க மனங்களுக்கு அக்னியும் நீரும்போல ஆறுதலும் நல்வழியும் தருவது வேறு இல்லை.”
8%
Flag icon
“நான் என்று கூறும்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கிக் குறுக்காதே.”
11%
Flag icon
“யோசித்துப் பார். எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டுவந்து யோசி. உன் அனுபவத்தை மீறியவைகூட அனுபவத்தின் தருக்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞானவழி. மீதியெல்லாம் சுயஏமாற்று. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே...”
12%
Flag icon
“கல்லாத நூல் குறித்து ஏளனம் செய்பவன் ஞானம் எனும் சொல்லை உச்சரிக்கவே தகுதியற்ற மூடன்”
12%
Flag icon
எனக்கு வேண்டுவதென்ன? எத்தனை எளிய வினா. ஆனால் எத்தனை சிரமமானது. நன்கு தெரிந்த விடை என ஒரு கணமும் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாத விடை என மறுகணமும் தோன்றிப் பிரமிக்க வைக்கும் பெரும் புதிர். மனம்
29%
Flag icon
“பெருமாள் விளக்கமல்ல, விளக்கத்தை ஒத்திப் போடும் முயற்சிதான்.”
32%
Flag icon
“மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்.”
37%
Flag icon
படைப்பு அழிவைத் தன் கர்ப்பத்தில் சுமக்கிறது.”
38%
Flag icon
மகாகாவியம் என்றால் அதை ஆற அமரக் கேட்கவேண்டும். நீர் அதை முழுமை செய்யும்.” “முழுமையாகி விட்டது.” “உமக்குத் திருப்தி இல்லை என்றீர்.” “அது படைப்பின் உச்சியில் கர்வபங்கமாக ஏற்படும் அதிருப்திதான்.
47%
Flag icon
“உங்கள் காவியத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? நீங்கள் எழுதிய கணமே அது விஷ்ணுவின் சொத்தாகி விடுகிறது.”
62%
Flag icon
“அடக்குதல் என்பது ஒத்திப்போடுதலேயாகும். நிரந்தர வெற்றி என்பது கடந்து செல்லல். காட்டு வழி செல்கிறோம். புலிப் பாதத்தடத்தைக் கண்டு பயந்து மரத்தின்மீது ஏறியமர்தல் தப்பும் வழியல்ல. பாதத் தடத்தை ஆராய்ந்து புலி போன திசையை அறிந்து, எதிர்வழி செல்லலே நிரந்தரமான தப்பும் வழியாகும். புலி பற்றிய ஞானமே புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கும் வழி.”
62%
Flag icon
“அறிதல் என்பதற்கு முடிவேயில்லை. புலன்வழி அறியப்படும் பிரபஞ்சம் எல்லையற்றது.”
62%
Flag icon
ஒன்றை அறிவது என்பதே அதனளவில் அதைக் கடந்து செல்வதுதான்.
62%
Flag icon
அறிந்தவற்றை மனம் நாடுவதில்லை.
62%
Flag icon
அதே சமயம் எப்போதும் நாம் நமது அளவைமீது ஐயம் கொண்டிருக்க வேண்டும்.
64%
Flag icon
புத்தர் என்பவர் துயரமற்ற மனிதனேயாவார்.”
72%
Flag icon
அஜிதன் புன்னகை புரிந்தான். பவதத்தரின் கண்களுக்குள்ளிருந்து கூரிய சர்ப்பநா துடித்து அவன் கண்களைத் தொட்டு மீண்டது. இந்த விவாவத்தில் அவன் பவதத்தரின் அதே பாணியை மேற்கொண்டான். எதிர்த் தரப்பின் தரிசனமையத்தை முற்றிலும் புறக்கணித்து அவற்றின் தருக்க அமைப்பை மட்டும் எதிர்கொண்டான். தருக்கம் தன் தரிசனத்தின் கவித்துவ மையம் நோக்கி நகரும்தோறும் காலிடறத் தொடங்கும். எனவே எதிராளியை இடைவிடாது மையம்நோக்கி இழுத்தான். பவதத்தர் தன் எச்சரிக்கையை எதனாலோ இழந்து, தன் தரப்பின் கவித்துவ முரணை மெல்லத் தொட்டு, சக்கரவாள ரேகா நியாயப்படி தருக்கப் பிழை செய்துவிட்டார். அது ஓர் உத்தியா என அவன் அகம் எச்சரிக்கை கொண்டது. ஆனால் ...more
73%
Flag icon
கண்ணீர் அவன்மீது சொட்டியது. அந்த இளம் உடலைத் தன் உடலாக உணர்ந்தார். தன் உறுப்பொன்று இளமைக்கு மீண்டதுபோல, அது மட்டும் காலத்தில் அப்படியே தங்கிவிட்டது போல. நீ என் உடலை கொண்டுசெல்வாய் இருளே. இந்த இளமையை என்ன செய்வாய்? எப்படி வெல்வாய்?