Murthy Thangarasu

18%
Flag icon
ஆம். தனிமை! தனிமையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்று இல்லாத, சமரசம் இல்லாத தனிமை. இந்தத் தனிமையை இம்மிகூட மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்பத்தான் கவிதை, காமம், உறவுகள், சமூகம், தத்துவங்கள் எல்லாமே. ஆம். ஒரே உண்மைதான். பிரபஞ்ச விரிவில் ஒவ்வோர் உயிர்த்துளி மீதும் கவிந்திருக்கும் மகத்தான தனிமை. அதற்குப் பரிகாரமே இல்லை. அதிலிருந்து தப்ப வழியே இல்லை. தப்ப வழியே இல்லை. ஆம் தப்ப வழியே இல்லை. பிங்கலன் தன்னுள் உவகை நிறைவதை அறிந்தான். கைவீசியபடி ஓடவேண்டும் போலிருந்தது. உரக்கக் கூவவேண்டும் போலிருந்தது.
விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate this book
Clear rating