ஓங்கி உயர்ந்த மகாவிமானம் அவன் நெற்றி. அங்கு நான்கு புஜங்களிலும் சக்கரங்களுடன் மடியில் ஸ்ரீதேவியுடன் தங்கமயமாக கேசவன் எழுந்தருளினான். பாஹ்யாகாரம் அவன் வயிறு. அங்கு நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் அமிர்தோத்பவை தேவியுடன் நீலநிறமான நாரணன் தோன்றி அருளினான். ரங்கமண்டபம் அவன் மார்பு. நான்கு கரங்களிலும் கதையுடன் கமலா பிராட்டியாருடன் அங்கு இந்திரநீல வண்ண மாதவன் பிரகாசித்தான். துவஜஸ்தம்பம் அவன் கழுத்து. விற்களை ஏந்திய நாற்கரங்களுடன் சந்திரசோபினி துணையுடன் வெண்ணிறமான கோவிந்தன் அங்கு தெரிந்தான். அவன் வலது விலாவில் சாந்தாகாரம். அங்கு ஹலாயுதங்களுடன் லட்சுமிதேவி சமேதராக விஷ்ணு தோன்றியருளினார். அவர் தங்க
...more