நன்மை, தீமை என்று முழுமுற்றான இருபாற் பிரிவினை செய்து கொள்ளவேண்டாம் என்றேன். தீர்மானமான தவறோ சரியோ ஏதும் இல்லை. நமது விருப்பமும் நமது தேவையும்தான் நீதியையும் அநீதியையும் உருவாக்குகிறது. மாபெரும் நதி ஒன்றுக்காக இழைக்கப்படும் சிறு அநீதி உண்மையில் நீதியின் ஓர் அம்சம்தான் என்றேன். விஷ்ணுபுரம் என்ற மகாதர்மம் விசுத்திக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் இட்டுச் சென்றபடி உள்ளது. அதன் வாழ்வு எப்படியாவது நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒன்று. அதற்குச் சில சமயம் பலிகள் தேவைப்படலாம். நமது தற்காலிக நியாய அநியாயங்களை வைத்து தச்சன் தண்டிக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கக் கூடாது. மகாகாலத்தில் நாமும் தச்சனும் வெறும் துளிகள்.
...more