வாழ்வு எந்தக் காரணமும் இல்லாத வதை. முடிவற்ற வதை. தன்னைத் தானே வதைத்து, பிறரை வதைத்து, வதையையே வாழ்வாக்கி, மீளும் கனவுகண்டு, முடித்துக்கொள்ளவும் மனமின்றி, சலித்து மட்கி ஓயும் வாழ்வு. மானுடப் புழுக்கள், மானுடப் புழுக்கள்.. அருவருப்பு தாங்காமல் காலம் காலைத் தூக்கி வைத்து ஒரே தேய்ப்பாகத் தேய்த்து விடுகிறது போலும்.