“அவ்வளவு மெத்தென்று, அவ்வளவு இதமான வெம்மையுடன், அந்த ஸ்பரிசத்தை வேறு எங்கும் காண முடியாது. ஒருமுறை அடிபட்டு இறக்கும் தருவாயில் இருந்த பறவை ஒன்றின் சிறகுகளின் இடுக்கில் துடிக்கும் மெல்லிய சதையை உதட்டில் வைத்துப் பார்த்தேன். அதுபோலத்தான். ஆனால் அதுவல்ல. உயிரின் அதிர்வு. மாமிச மணம். ஒருமுறை என் கைச்சதை வெட்டுண்ட போது அந்த ரணத்தை வழியும் உதிரத்துடன் உதட்டில் வைத்து அழுத்தினேன். அதைப் போலத்தான் சோமரே. ஆனால் அதுவும் முழுமையல்ல. முத்தமிடும்போது என் கண்கள் படரும் அந்த வெம்மை கலந்த மூச்சுக் காற்றை எப்படி அடைவது? சட்டென்று அவ்வுதடுகள் விலகும்போது என் உதடுகளில் படர்ந்த வழவழக்கும் இதழ்நீரின் மணத்தை எப்படி
...more