More on this book
Community
Kindle Notes & Highlights
அச்சம் உருவாக்கிக் கொண்ட ஆசைதான்.
சொற்களாக ஆகாத நெகிழ்வு எங்கும் நிரம்பியது.
“அவ்வளவு மெத்தென்று, அவ்வளவு இதமான வெம்மையுடன், அந்த ஸ்பரிசத்தை வேறு எங்கும் காண முடியாது. ஒருமுறை அடிபட்டு இறக்கும் தருவாயில் இருந்த பறவை ஒன்றின் சிறகுகளின் இடுக்கில் துடிக்கும் மெல்லிய சதையை உதட்டில் வைத்துப் பார்த்தேன். அதுபோலத்தான். ஆனால் அதுவல்ல. உயிரின் அதிர்வு. மாமிச மணம். ஒருமுறை என் கைச்சதை வெட்டுண்ட போது அந்த ரணத்தை வழியும் உதிரத்துடன் உதட்டில் வைத்து அழுத்தினேன். அதைப் போலத்தான் சோமரே. ஆனால் அதுவும் முழுமையல்ல. முத்தமிடும்போது என் கண்கள் படரும் அந்த வெம்மை கலந்த மூச்சுக் காற்றை எப்படி அடைவது? சட்டென்று அவ்வுதடுகள் விலகும்போது என் உதடுகளில் படர்ந்த வழவழக்கும் இதழ்நீரின் மணத்தை எப்படி
...more
வெளிஉலகிற்கு நான் அப்பாவியான ஓர் இளைஞன். உள்ளே பித்துப்பிடித்து அலைந்து கொண்டிருந்தேன்.
ஒருவன் மிகப் பெரிய நோக்கத்திற்காக தன்னையே பலி தருகிறான். அது எவருக்குமே தெரியவில்லை என்றால் அந்தச் செயலுக்கு என்ன அர்த்தம்?
காமம் நம் மனத்தில் வாசல் திறந்து நுழையும்போது அதன் நிழல்தான் முதலில் உள்ளே வருகிறது என்று. காமத்தை விட பூதாகரமானது அந்த நிழல்.”
“சஞ்சலம் மிக்க மனங்களுக்கு அக்னியும் நீரும்போல ஆறுதலும் நல்வழியும் தருவது வேறு இல்லை.”
ரிக்வேதாதிபதியான பைலனுக்கும் யஜுர்வேதாதிபதியான வைசம்பாயனுக்கும் சாமவேதாதிபதியான ஜைமினிக்கும் அதர்வணவேதாதிபதியான சுமந்துவிற்கும் இணையானவன் அவன்.
எல்லாச் சொல்லுக்கும் முன்னும் பின்னும் மௌனம் உள்ளது.
திசைகளற்ற வெளியில் எந்தத் திசையும் முன்னோக்கியதுதானே.
மீதிப் பேர் சாவதற்குப் பிள்ளை பெறுபவர்கள்.”
உன் அனுபவத்தை மீறியவைகூட அனுபவத்தின் தருக்கத்திற்கு உட்பட்டவையாக இருந்தாக வேண்டும். அதுவே ஞானவழி. மீதியெல்லாம் சுயஏமாற்று. ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே...”
“கல்லாத நூல் குறித்து ஏளனம் செய்பவன் ஞானம் எனும் சொல்லை உச்சரிக்கவே தகுதியற்ற மூடன்”
கிருத யுகத்தில் யாகங்களும் த்ரேதா யுகத்தில் தர்மமும் த்வாபர யுகத்தில் ஞானமும் மோட்ச மார்க்கமாக இருந்தன. கலியுகத்தில் இவற்றுக்கு வழியில்லை.
தினவடங்கியதும் சோர்வுடனும் துயரத்துடனும் திரும்பிச் செல்கின்றன.
ஆம். தனிமை! தனிமையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்று இல்லாத, சமரசம் இல்லாத தனிமை. இந்தத் தனிமையை இம்மிகூட மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்பத்தான் கவிதை, காமம், உறவுகள், சமூகம், தத்துவங்கள் எல்லாமே. ஆம். ஒரே உண்மைதான். பிரபஞ்ச விரிவில் ஒவ்வோர் உயிர்த்துளி மீதும் கவிந்திருக்கும் மகத்தான தனிமை. அதற்குப் பரிகாரமே இல்லை. அதிலிருந்து தப்ப வழியே இல்லை. தப்ப வழியே இல்லை. ஆம் தப்ப வழியே இல்லை. பிங்கலன் தன்னுள் உவகை நிறைவதை அறிந்தான். கைவீசியபடி ஓடவேண்டும் போலிருந்தது. உரக்கக் கூவவேண்டும் போலிருந்தது.
எப்படிச் சொன்னாலும் எல்லாம் அப்படியே மிஞ்சிவிடுகின்றன.
ஓர் அமைப்பு அன்றாட வாழ்வாக மாறும்போது எல்லாம் சகஜமாக ஆகி விடுகிறது. அன்றாட அநீதி என்பது அநீதியல்ல. ஒருமுறைமை அவ்வளவுதான். இந்தச்
நன்மை, தீமை என்று முழுமுற்றான இருபாற் பிரிவினை செய்து கொள்ளவேண்டாம் என்றேன். தீர்மானமான தவறோ சரியோ ஏதும் இல்லை. நமது விருப்பமும் நமது தேவையும்தான் நீதியையும் அநீதியையும் உருவாக்குகிறது. மாபெரும் நதி ஒன்றுக்காக இழைக்கப்படும் சிறு அநீதி உண்மையில் நீதியின் ஓர் அம்சம்தான் என்றேன். விஷ்ணுபுரம் என்ற மகாதர்மம் விசுத்திக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் இட்டுச் சென்றபடி உள்ளது. அதன் வாழ்வு எப்படியாவது நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒன்று. அதற்குச் சில சமயம் பலிகள் தேவைப்படலாம். நமது தற்காலிக நியாய அநியாயங்களை வைத்து தச்சன் தண்டிக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கக் கூடாது. மகாகாலத்தில் நாமும் தச்சனும் வெறும் துளிகள்.
...more
இதை அவரே கூட யோசித்திருப்பார். ஆனால் இன்னொருவர் அதைக் கூறிக் கேட்டால்தான் மனம் ஆறும். மனித மனம் பெரியவர்களைத் தேடிச் செல்வது இதற்காக மட்டும்தான்.
“நடுக்கடலில் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க முடியும்.”
ஆயிரம் கோடிப் பார்வைகள் அனுதினம் சந்தித்துக் கொள்கின்றன. அவற்றில் ஒருசில பார்வைகளின் போதுதான் தேவருலகில் ஒரு பாரிஜாதப் பூ மலர்கிறது.
ஓங்கி உயர்ந்த மகாவிமானம் அவன் நெற்றி. அங்கு நான்கு புஜங்களிலும் சக்கரங்களுடன் மடியில் ஸ்ரீதேவியுடன் தங்கமயமாக கேசவன் எழுந்தருளினான். பாஹ்யாகாரம் அவன் வயிறு. அங்கு நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் அமிர்தோத்பவை தேவியுடன் நீலநிறமான நாரணன் தோன்றி அருளினான். ரங்கமண்டபம் அவன் மார்பு. நான்கு கரங்களிலும் கதையுடன் கமலா பிராட்டியாருடன் அங்கு இந்திரநீல வண்ண மாதவன் பிரகாசித்தான். துவஜஸ்தம்பம் அவன் கழுத்து. விற்களை ஏந்திய நாற்கரங்களுடன் சந்திரசோபினி துணையுடன் வெண்ணிறமான கோவிந்தன் அங்கு தெரிந்தான். அவன் வலது விலாவில் சாந்தாகாரம். அங்கு ஹலாயுதங்களுடன் லட்சுமிதேவி சமேதராக விஷ்ணு தோன்றியருளினார். அவர் தங்க
...more
பன்னிரு திருநாமங்களின் ஒளியில் பத்மன் உடல் பல்லாயிரம் சூரியர்களின் தொகுதி போல தகதகத்தது. அவனே பிரம்ம சொரூபம் என்பது ஐயமின்றித் தெரிந்தது.
இன்பத்தின் உச்சமே துன்பத்தின் உச்சமும் என்று இப்போது அறிந்தேன்”
தெளிவாகச் சொல்லப் போனால் உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான ஞானம் மட்டுமே உண்மை. அதை பிறருக்குப் பகிரும் நோக்கத்துடன் உருவானதே மொழி.
சாத்தியமற்ற ஒன்றுக்காக அவன் தன்னை அழித்துக் கொள்கிறான். பித்தனாக தெருமுனையில் நின்று உருகுகிறான்.
இருட்டில் தன் உடல் இல்லாமல் ஆகி, மனம் மட்டும் இயங்குவதாகப் பட்டது.
வாழ்வு எந்தக் காரணமும் இல்லாத வதை. முடிவற்ற வதை. தன்னைத் தானே வதைத்து, பிறரை வதைத்து, வதையையே வாழ்வாக்கி, மீளும் கனவுகண்டு, முடித்துக்கொள்ளவும் மனமின்றி, சலித்து மட்கி ஓயும் வாழ்வு. மானுடப் புழுக்கள், மானுடப் புழுக்கள்.. அருவருப்பு தாங்காமல் காலம் காலைத் தூக்கி வைத்து ஒரே தேய்ப்பாகத் தேய்த்து விடுகிறது போலும்.
“சங்கீத யட்சி” என்றாள் ஒரு பெண். “சங்கீதம் எப்போதும் பூரணத்திற்கு ஒரு மாத்திரை குறைவாகத்தான் இருக்க வேண்டும். நாதம் முழுமை பெற்றால் அதற்குரிய யட்சி கண்விழித்து விடும்.”
பேசாத சொற்களின் கனம் உனக்குத் தெரியாது.
இது வெறும் சதைதான். இதுதான் அந்த மந்திரம். வெறும் சதைதான். குருநாதரே சதைதான் முதல்உண்மை போலும். சதை சதையை உண்டுபண்ண ஆத்மாவைப் பயன்படுத்திக் கொள்கிறது போலும்.
ஒருவன் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் போதுகூட பொய்பேசினான் என்றால் அது எப்படிப்பட்ட பொய்?