ஒரு காகம் வானை நோக்கி ஏன் என்று கேட்டது போலிருந்தது. பூமி மீது ஒவ்வோர் உயிரும் தன் உயிரை முழுக்கக் குவித்து பெருவெளி நோக்கி ஒரே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று பட்டது. சில கணங்களில் தாவரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் எல்லாம் ஏன் என்ற அந்த ஒற்றைச் சொல்லாகவே இருப்பதாகத் தோன்றியது