More on this book
Community
Kindle Notes & Highlights
“சஞ்சலம் மிக்க மனங்களுக்கு அக்னியும் நீரும்போல ஆறுதலும் நல்வழியும் தருவது வேறு இல்லை.”
ஞானவழியில் நிம்மதி இல்லை. ஆனால் கர்வமும் சுயதிருப்தியும் உண்டு. ஆனந்தத்தில் பெரிய ஆனந்தம் அதுவே...”
“மனைவி என்பது ஒருவனின் ஆடிப் பிம்பமல்லவா? தாழ்வுணர்வு உள்ள ஒருவனுக்கு மனைவிதான் மிகவும் அருவருப்பூட்டுவாள். தாசி என்பவள் மனைவியிலிருந்து நேர்மாறாக இருக்கவேண்டும் இவர்களுக்கு.”
ஒரு காகம் வானை நோக்கி ஏன் என்று கேட்டது போலிருந்தது. பூமி மீது ஒவ்வோர் உயிரும் தன் உயிரை முழுக்கக் குவித்து பெருவெளி நோக்கி ஒரே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று பட்டது. சில கணங்களில் தாவரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் எல்லாம் ஏன் என்ற அந்த ஒற்றைச் சொல்லாகவே இருப்பதாகத் தோன்றியது
“அகங்காரமிருந்தால் வாழ்க்கையின் அடிகள் ரொம்ப வலிக்கும்.”