‘அதோ ஒரு மண்டபம் தெரிகிறதே, அதுதான் லிங்கன் மண்டபம்’ என்றான் பஞ்சு. ‘ஆப்ரஹாம் லிங்கன் மண்டபமா?’ என்று கேட்டார் மாமா. ‘ஆமாம்’ என்றான் பஞ்சு. ‘ஹர ஹர’ என்று அந்த மண்டபத்தை நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாஸ்திரிகள். ‘சாஸ்திரிகளே, எதுக்காக இப்போது கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள்?’ அம்மாஞ்சி கேட்டார். ‘லிங்கம் வைத்து மண்டபம் கட்டியிருக்கிறாளே! மஹாலிங்கம், ஜம்புலிங்கம் மாதிரி அமெரிக்காவிலே ஆப்ரஹாம் லிங்கம் விசேஷம் போலிருக்கு’ என்றார் சாஸ்திரிகள். சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டுக் குலுங்கிச் சிரித்தனர் அனைவரும்.