தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம், சோழர் காலத்தில் வெட்டப்பட்டது. இருபது கிலோ மீட்டர் நீளமும் ஐந்து கி.மீ அகலமும் கொண்ட ஏரியின் அப்போதையப் பெயர், வீரநாராயண மங்கலம் ஏரி. மனித உழைப்பை மட்டுமே கொண்டு வெட்டப்பட்ட நீர்நிலைகளில் மிகப்பெரியது இது. சோழர் காலத்தில் 20 கிலோமீட்டர் நீளமும் 7 கிலோமீட்டர் அகலமும் உடையதாக இருந்தது இப்போது 16 கி.மீ நீளமும் நான்கு கி.மீ அகலமும் இருக்கிறது.