Kindle Notes & Highlights
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம், சோழர் காலத்தில் வெட்டப்பட்டது. இருபது கிலோ மீட்டர் நீளமும் ஐந்து கி.மீ அகலமும் கொண்ட ஏரியின் அப்போதையப் பெயர், வீரநாராயண மங்கலம் ஏரி. மனித உழைப்பை மட்டுமே கொண்டு வெட்டப்பட்ட நீர்நிலைகளில் மிகப்பெரியது இது. சோழர் காலத்தில் 20 கிலோமீட்டர் நீளமும் 7 கிலோமீட்டர் அகலமும் உடையதாக இருந்தது இப்போது 16 கி.மீ நீளமும் நான்கு கி.மீ அகலமும் இருக்கிறது.
வேதம் ஓதிய சட்டர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், அவர்களின் தலைவியராக விளங்கிய தலைக்கோல் மகளிர், ஆடல் மகளிருக்கு ஆடல் நட்டுவனார், பக்திப் பாடலிசைத்த பிடாரர்கள், பல்வேறு இசைக்கருவிகளில் வித்தகர்களாக விளங்கிய வாத்திய மாராயர்கள், சண்டீசப் பெருமானின் பெயரில் கோயில் சொத்துக்களை வாங்கி விற்று அதைக் கணக்கெழுதிய கணக்கர்கள், அரிசி, பருப்பு, நெய்யிலிருந்து வாழைத்தார் போன்ற அத்தனை பொருள்களையும் பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வந்த விவசாயப் பெருமக்கள், நிவந்தங்கள் அளித்த வணிகர்கள், கோயிலுக்குக் காவல் காத்த காவல் வீரர்கள் என்று ஒரு பெரிய கலைஞர் கூட்டமும் இதர கோயில் நிர்வாகத்தினரும் மன்னருக்கு இணையாகக்
...more
கல், சுதை, வெண்கலம் மற்றும் பஞ்சலோகம் ஆகிய மூன்றைக் கொண்டு விதவிதமான, அழகழகான சிற்பங்களை அமைத்து சோழர்கள் வித்தை காண்பித்திருக்கிறார்கள்.
சிற்ப மகரிஷிகள் படைத்தருளிய சாஸ்திரங்களான காஸ்யபம், மயன்மதம் போன்ற வழிமுறைகளைக் கொண்டு கற்சிலைகளும் கல்சிற்பங்களும் செய்யப்பட்டன.
சமையல் கலையை விளக்கும் ‘மடை நூல்’ எழுதப்பட்டு, அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சாந்திக் கூத்து, ஆரியக் கூத்து, சாக்கைக் கூத்து, தமிழகக் கூத்து, தெருக்கூத்து என்று ராஜராஜன் காலத்துக் கூத்துகளில் சில வகைகள் உண்டு.