ஆம், பிரபு. கேடுகெட்ட, மானங்கெட்ட, மதிகெட்ட மரபினர்; சோம்பேறிகள். எந்தக் கோட்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், மனசாட்சிக்குமே தங்களை உட்படுத்திக்கொள்ளாத மக்கள். சுத்த க்ஷத்ரியர்களைப் போலல்லாமல், மறைந்திருந்து தாக்கும் கோழைகள். அவர்களை ஆளும் அரசர்களே உண்மைக்குப் புறம்பானவர்கள்; தன்னலம் ஒன்றையே பின்பற்றுபவர்கள். ஏன், மனித இனத்துக்கே அவர்கள் ஒரு சாபக்கேடு!’’