More on this book
Community
Kindle Notes & Highlights
மேற்கிலிருந்து விரைந்து வந்து தெற்கு
புன்னகைத்த முகத்தோடு குதிரையில் போய்க்கொண்டிருந்தாள்.
வாழ்கிறவனும் பொருட்படுத்தாத, சாகிறவனும் பொருட்படுத்தாத ஒன்றாக மரணம் மாறிவிட்டது. அது தனது வலுவையும், தான் ஏற்படுத்தும் வலியையும் இழந்து, மதிப்பற்ற ஒன்றாக சாலையெங்கும் புலம்பியபடி அலைந்தது.
ஒவ்வொருவனும் இப்படி ஓராயிரம் நினைவுகளுக்கு எதிராக நாட்களைக் கடக்கிறான். மீண்டும் வீட்டுப் பரணில் தாவிக் குதித்தோடும் எலியைக்கண்டு அதிர்ச்சியில் கைகாலெல்லாம் உறைந்துபோய் மனிதர்கள் உட்கார்ந்து விடுகிறார்கள். எலிகள் துள்ளிக்குதித்துப் போய்விடுகின்றன.
ஊர் எவனையாவது ஒருவனை அழைத்து பெரியாம்பிளை ஆக்கி அவனது முதுகிலே தொற்றிக்கொள்கிறது. அதன்பின் அவன் ஊரைத் தூக்கிக்கொண்டே அலைகிறான்.