தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate it:
38%
Flag icon
மெல்லிய கோடு ஒன்றால் கற்பனையும் உண்மையும்  பிரிக்கப் பட்டிருக்கின்றன. எது கற்பனை என்று உண்மைக்குத் தெரியும். அது அழிந்தால் அனைத்தும் ஒன்றுதான். அங்கே எதுவும் சாத்தியம்.
45%
Flag icon
பலரும் எண்ணிக்கொண்டிருப்பது போல மக்களை எவரும் சாதிகளாகப் பிரிக்கவில்லை. மக்கள் சாதிகளாக ஒருங்கிணைந்தார்கள்.
45%
Flag icon
சமமான தொழிலும் சமமான செல்வமும் கொண்ட குலங்கள் ஒன்றுடன் ஒன்று ஒரு சாதியாக ஆயின. ஆனால் அந்த சாதிக்குள்ளும் அவர்களின் குலஅடையாளம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதைத்தான் கூட்டம் என்றும் கோத்திரம் என்றும் சொல்கிறோம். எல்லா சாதிகளிலும் இந்த உட்பிரிவுகள் உண்டு.
45%
Flag icon
குலங்கள் இணைவதற்கு ஒரேவழி பெண் எடுத்து பெண் கொடுப்பதுதான்.
51%
Flag icon
சமூக அமைப்பில் ஒன்றும் செய்ய முடியாதவர்களின் அடிவயிற்று ஆவேசமும் அநீதி இழைத்தவர்களின் குற்றவுணர்ச்சியும் இணைந்து இத்தெய்வங்களை உருவாக்குகின்றன. அத்தெய்வங்கள் நினைவில் நிறுத்தப்படுவதென்பது நீதியுணர்ச்சியை அழியாது காப்பதுதான்.
65%
Flag icon
இயற்கையின் பயங்கரம், மனிதன் புரிந்துகொள்ள முடியாத மகத்துவம் வெளிப்படும்