More on this book
Community
Kindle Notes & Highlights
by
Jeyamohan
Read between
August 19 - October 2, 2019
உலக வரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்குத் தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தாம் .
Karthikeyan liked this
இயற்பியலின் இரும்பு விதிகளுக்குள் மனிதனைக் கட்டிப்போட்டுவிட்டு தெய்வங்களும் பேய்களும் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்தன என்று எண்ணும்போதே கசப்பாக இருந்தது.
மண்ணில் ஒரே ஒரு குழந்தை பசியால் சாகக்கண்டால் கூட முலைசுரக்கும் அன்னையாகிய என்னால் மகிழ்ச்சியாக ஒருவாய் சோறு உண்ண முடியாது.
கிறிஸ்தவ மதத்தில் உள்ள பரிசுத்த ஆவியும் பிதாவும் பெருந்தெய்வங்கள். பெருந்தெய்வச் சாயல் இருந்தாலும் ஏசுவும் அன்னைமரியும் சிறுதெய்வங்கள் போன்றவை. பிதாவிடமும் பரிசுத்த ஆவியுடனும் வேண்டிக்கொள்வதை விட ஏசுவிடமும் மரியிடமும் வேண்டிக்கொள்ளும்போதே நாம் அணுக்கமாக உணர்கிறோம்.
அவை அம்மக்களின் அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள். மாறாக அவை அம்மக்களின் நுண்ணுணர்வால் உருவானவையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இப்பிரபஞ்சத்தை விளக்க தொன்மையான மக்கள் அறிவியலை பயன்படுத்தவில்லை. கவித்துவத்தையே பயன்படுத்தினர். அந்தக் கவித்துவப் புரிதல்களில் இருந்து உருவானவையே இயற்கைவழிபாடும் விலங்குத்தெய்வங்களும் எல்லாம்.
உலகம் எங்கும் பொன்னிறம் ,வெண்மை நிறம் அழகென்று கொண்டாடப்படும்போது அழகுக்கு உச்சமென்று நம்முன்னோர் வடித்து வைத்த திருமேனி நிகரற்ற கருப்பு நிறத்துடன் இருக்கிறது. காளிச்சரண்
”பணியாரம் சுட்டசட்டி பாதிமணம் போகலையே. பந்தல் பிரிக்கலையே, வந்தஜனம் போகலையே”
தெய்வம் பேயாவதில்லை. தெய்வமானபின் அது பேயும் அல்ல.
வெளிப்பாடு கொள்வதற்கு ஒரு ஊடகமில்லாமல் ககன வெளியில் நின்றிருக்கும் உணர்ச்சி அது.
நம் ஒவ்வொருவரின் குல தெய்வங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய வரலாற்றுப் பின்புலம் உள்ளது. அவை விதைகள். கொஞ்சம் ஆய்வின் நீர் பட்டால் முளைத்து காடாக மாறக்கூடியவை. வரலாறு அறியா மூடர்களை நம்பி நம் குலதெய்வ வழிபாட்டை அசட்டுத்தனமாக மூடநம்பிக்கை என்றெல்லாம் முத்திரை குத்தி மறந்துவிட்டோம் என்றால் நாம் இழப்பது நம் மூதாதையரைத்தான்.
Karthikeyan liked this

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)