அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். வழக்கமாக அவர் படுக்கையில் தவிர பெண்களிடம் பேசுவதோ முகம் கொடுப்பதோ இல்லை. அன்றைய வழக்கம் அது. பெண்கள் இரண்டாம்தரமான பிறவிகள் என்னும் நம்பிக்கை ஓங்கியிருந்த காலம். குடியாளும் ஆண்கள் முன் வீட்டுப்பெண்கள் வந்து நிற்கவும் மாட்டார்கள். ஆனால் கருவுற்ற மனைவியை அவர் செல்லக்குழந்தை போல நடத்தத் தொடங்கினார். காலை எழுந்ததுமே அவள் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்று விரும்பினார். நாள் முழுக்க நினைத்து நினைத்து அவளை அழைத்து அருகே அமரச்செய்து கொஞ்சினார். அவள் விரும்புவதை எல்லாம் கொண்டுவந்து கொடுத்தார்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)