அதன் பிறகு வன்னியடிமறவன் கன்னிச் செட்டியின் கண்களைப்பார்த்து, கள்ளர்களின் குறியீட்டு மொழியில் “செட்டியாரே, பஞ்சுக்கு பொருள் கொடுப்பீரா?” என்று கேட்டான். அது களவுத்தூது என செட்டி புரிந்துகொண்டான். ‘நான் திருட வந்தவன். இரவு உங்கள் வீட்டில் கன்னம் வைப்பதை நீ விரும்பவில்லை என்றால் ஈட்டுத் தொகையாக கேட்கும் பணத்தை கொடுத்து அனுப்பவேண்டும்’ என்பது அதன் பொருள். வடக்கு சூரங்குடி மறவருக்குரிய குறியீட்டு வார்த்தை அது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)