உலகவரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்கு தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகமெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தான். இந்தியாவிலும் அது நிகழ்ந்தது. அசுரர்கள் என நம் புராணங்களில் சொல்லப்படுபவர்கள் தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள். நாகர்கள் தோற்கடிக்கப் பட்டபோது அவர்கள் பாதாளத்தில் வாழ்பவர்களாக மாற்றப்பட்டார்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)