அன்றைய திருவிதாங்கூரில் மருமக்கள் வழி அரசுரிமை நிலவியது. மகாராஜா எத்தனை பெண்ணை வேண்டுமென்றாலும் மணக்கலாம். ஆனால் அரசியாக அரண்மனைக்குக் கொண்டு வரக்கூடாது. அரசியெனும் பதவி மகாராஜாவின் அன்னைக்கும், சகோதரிகளுக்கும் உரியது. சகோதரியின் மூத்த மகனே அடுத்த அரசராக ஆகும் முறைகொண்டவன். இவ்வழக்கம் மகாபாரதக் காலம் முதலே உள்ளதுதான். கம்சனின் வாரிசாக கிருஷ்ணன் ஆனது அப்படித்தான். மகாராஜாவின் மைந்தர்களுக்கு ‘தம்பி’ என்ற பட்டம் மட்டும் உண்டு. இளவரசர்களுக்குரிய உரிமைகளும் உண்டு.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)