நாட்டார்தெய்வங்களைப் பற்றிய கதைகளில் உள்ள முக்கியமான அம்சம் இது. அநீதிக்கு எதிரான அறச்சீற்றம். அன்றைய சமூக அமைப்பில் ஒன்றும் செய்ய முடியாதவர்களின் அடிவயிற்று ஆவேசமும் அநீதி இழைத்தவர்களின் குற்றவுணர்ச்சியும் இணைந்து இத்தெய்வங்களை உருவாக்குகின்றன. அத்தெய்வங்கள் நினைவில் நிறுத்தப்படுவதென்பது நீதியுணர்ச்சியை அழியாது காப்பதுதான்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)