பண்டித அயோத்திதாசர் இந்தியாவின் சாதியமைப்பு ஒரு தலைகீழ் திருப்பம் நிகழ்ந்ததன் விளைவு என்று வாதிடுவார். ஏதோ ஒருகாலத்தில் சாதியின் உச்சநிலையில் இருந்தவர்கள் கடைநிலைக்கு வந்தனர் என்றும் அந்தக் கடைநிலையருக்கும் உச்சியில் இருப்பவர்களுக்கும் நடுவே உள்ள கடும்பகையும் அதேசமயம் விசித்திரமான ஒற்றுமையும் கொண்ட உறவு அதையே காட்டுகிறது என்றும் சொல்வார்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)