தடைசெய்யப்பட்டாலும் மக்கள் மேலும் நெடுங்காலம் தங்கள் தெய்வங்களை ரகசியமாக வழிபட்டனர். அவர்களை தேடித்தேடி வேட்டையாடியது ரோமாபுரி அரசு. இந்த மதவேட்டை இன்குவிசிஷன் [inquisition] என்று சொல்லப்பட்டது. அப்படி ரகசிய வழிபாடுகள் செய்தவர்கள் சூனியக்காரர்கள் என்று சொல்லப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். ஜோன் ஆஃப் ஆர்க் போன்ற மாபெரும் வீராங்கனைகள் அப்படி எரித்துக்கொல்லப்பட்டார்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)