தீர்க்கதமஸைப் போன்ற தந்தையர் நம் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. காமம், சுயநலம், ஆணவம் தவிர எந்த இயல்பும் இல்லாதவர்கள். எவரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள்.அவர்களை என்ன செய்வதென்றே நமக்குத் தெரிவதில்லை. அவர்களை வெறுக்க நினைப்போம். ஆனால் வெறுக்கமுடியாது. காரணம் அவர் நம் தந்தை, தாத்தா, முப்பாட்டா. அவர் வலிமையுடன் இருக்கும் காலம் வரை அவரை அனைவரும் ரகசியமாக வசைபாடுவார்கள். ஆனால் வயதாகி நோயுற்று வீழ்ந்தால் அந்த வெறுப்பு மறைந்துவிடும்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)