அதையே பல நுணுக்கமான வேறுபாடுகளுடன் மனிதர்களும் நடைமுறைப் படுத்தியிருந்தனர். ஏறுதழுவுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் வென்றவனுக்கே பெண்கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. உடல்வலிமை அன்றைய சமூகத்தில் மிகமிக முக்கியமான ஒரு விழுமியமாக எண்ணப்பட்டது. போர்த்திறனும் பயிற்சியும் அதற்கு அடுத்தபடியாக முக்கியமாகக் கருதப்பட்டது. போட்டிச்செய்யுள் அமைத்தல் போன்ற அறிவுசார்ந்த போட்டிகள் உயர் தளத்தில் நிகழ்ந்தன என்பதையும் பண்டைய இலக்கியங்கள் காட்டுகின்றன.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)