பேச்சிப்பாறை அணை குமரிமாவட்டத்தின் முகத்தையே மாற்றியமைத்தது. பருத்தி விளைந்திருந்த வறண்ட நிலமான தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்கள் தென்னந்தோப்புகளும், வயல்களும் ஆக மாறின. மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது. அந்தச்சாதனையை நிகழ்த்தியவர் ஐரோப்பிய பொறியியலாளரான மிஞ்சின். மிஞ்சித்துரை என அழைக்கப்படும் அவரது சமாதி இன்றும் பேச்சிப்பாறை அணைப்பகுதியில் உள்ளது. குமரிமாவட்ட மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுமுண்டு.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)