ஆனால் இந்துமதம் ஒரு தலைமை அமைப்போ, ஒரு மையக்கட்டுப்பாடோ இல்லாதது. ஆகவே தோற்கடிக்கப்பட்ட தெய்வங்கள் கூட அழிவதில்லை. அவை வெறும் பேய்களாக மாறிவிடுவதில்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவை வேறுவடிவில் மையமதத்திற்குள் எழுந்து வந்துவிடுகின்றன. ராமாயணத்தில் ராவணன் ‘வில்லன்’. ஆனால் சிலநூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட ‘உத்தர ராமாயணத்தில்’ ராவணன் கதாநாயகன் ஆகிவிட்டான். நாகங்கள் இன்றும் நம் ஆலயங்கள் அனைத்திலும் தெய்வமாக அமைந்துள்ளன. நாகம் துணையாக இல்லாத தெய்வமே நமக்கு இல்லை!

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)