தமிழகத்தின் பல கோயில்களில் வாசலுக்கு வெளியே ஒரு கல் தெய்வமாக நின்றிருக்கும். அதற்கு பூசைகள் வழிபாடுகள் ஏதும் செய்யப்படுவதில்லை. அதை எவரும் வணங்குவதுமில்லை. சாதாரணமான கல்லைப்போல அதை நடத்தமாட்டார்கள். அவ்வளவுதான். அதில் மாட்டைக் கட்டுவதில்லை. செருப்பை வைப்பதில்லை. குந்தி அமர்ந்து வெயில் காய்வதிலை. ஆனால் நாய்களுக்கு அந்த வேறுபாடு தெரிவதில்லை. பலசமயம் அவை கால்தூக்கி மூத்திரம் சொட்டிவிட்டுச் செல்லும். அதை பிரம்மஹத்தி என்பார்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)