ஐரோப்பாவில் இருந்த தொல்மதங்களை பொதுவாக pagan மதங்கள் என்பார்கள். கிபி இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரியின் பேரரசர்களால் கிறித்தவ மதம் ஐரோப்பாவில் பரப்பப்பட்டபோது அனைத்து பாகன் மதங்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. அவர்களின் வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டன. கூடவே அந்தத் தெய்வங்கள் எல்லாம் பேய்கள், பிசாசுகள் என்று விளக்கப்பட்டன. அவை அழிவையும், நோய்களையும் அளிப்பவை என்று கூறப்பட்டன. இன்றுகூட அந்நம்பிக்கை ஐரோப்பாவில் வலிமையாகவே உள்ளது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)