அதேபோல சிங்க வடிவம் கொண்டு மிகக்கோரமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் விஷ்ணுதான். அகோபிலம் போன்ற கோயில்களில் நரசிம்மருக்கு ஆடுகளை வெட்டி ரத்தபலி கொடுக்கிறார்கள். அதேசமயம் தாமரை இதழ் போன்ற கண்கள் கொண்ட பேரழகனாகவும் விஷ்ணுவை வழிபடுகிறோம். மூன்று மடிப்புக்ளாக மடிந்த காலத்தின்மேல் இப்பிரபஞ்சமே தன் உடலாககொண்டு படுத்திருக்கும் நினைப்புக்கெட்டாத காக்கும் சக்திதான் விஷ்ணு என்று விசிஷ்டாத்வைத வைணவர்கள் வணங்குவார்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)