இப்படி கொஞ்சம் விரிந்த பார்வையில் அணுகினால் இந்துமதம் செயல்படும் முறை தெரியும். அதன் ஒருமுனையில் பெயரோ குணங்களோ அடையாளங்களோ இல்லாததும் மனித நினைப்புக்கெல்லாம் அப்பாற்பட்டதுமான பிரம்மம் என்னும் தெய்வம் உள்ளது. நேர் மறுமுனையில் நம் தாத்தாவாக இருந்து இறந்தவர் தெய்வமாக உள்ளார். நம் தாத்தாவை பிரம்மத்தின் அம்சம் என்று வழிபடுகிறோம். ஏனென்றால் எல்லாமே பிரம்மம்தான். எங்கே இந்த நம்மை மீறிய ஒரு மகத்துவம் வெளிப்படுகிறதோ அங்கே பிரம்மத்தை மேலும் தெளிவாக நம்மால் காணமுடிகிறது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)