எல்லா பொருளிலும் சூரியஒளி பட்டு பிரதிபலிக்கிறது. கண்ணாடியில் மேலும் கூடுதலாக ஒளிவிடுகிறது. அதைப் போன்றவர்களே நாட்டுப்புறத்தெய்வங்கள். அவர்களின் பயங்கரமும் கொடூரமும் அருளும் இந்தப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள பிரம்மத்தின் பலவகையான முகங்கள்தான். ஆகவே பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் முதற்பெருந்தெய்வம் எல்லாமே ஒன்றுதான். ’மெய்மை ஒன்றுதான், அறிஞர் அதை பலவாக வழிபடுகிறார்கள்’ [ஏகம் சத்விப்ரா, பஹுதா வதந்தி!] என்று ரிக்வேத வாக்கியம் சொல்கிறது .

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)