வெளியே நின்று பார்ப்பவர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் மூன்று வகையான வழிபாடுகள் என்று நினைக்கிறார்கள். ஆராய்ந்தால் நம் தெய்வங்களுக்கு எல்லாம் இந்த மூன்று முகங்கள் உண்டு எனத் தெரியும். பொன்னார் மேனியன் என்றும், அழகே உருவான சுந்தரேசன் என்றும் சிவனை வழிபடுகிற ஒரு மரபிருக்கிறது. அதேசமயம் சுடலைப் காக்கும் சுடலைப்பொடி பூசி, எருக்குமாலை அணிந்து சுடுகாட்டைக் காக்கும் ருத்ரன் என்றும் வணங்குகிறோம். சைவசித்தாந்திகளுக்கு இப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் சக்தியை ஆட்டி வைக்கும் சிவமெனும் அறியவே முடியாத கருத்துதான் சிவன்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)