மண்ணில் வாழ்கையில் அரிய செயல்களைச் செய்தவர்கள், மாவீரர்கள், பெருந்தியாகங்களை ஆற்றியவர்கள், சான்றோர்கள் தெய்வமாகிறார்கள். அது ஒரு பொது விதிதான். ஆனால் எப்போதும் அப்படி அல்ல என்பது நாட்டார் கதைகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். பல நாட்டார் தெய்வங்கள் வாழும்போது கொடியவர்களாகவும் மக்களுக்குத் தீங்கிழைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட பின்னர் அந்தக் குற்ற உணர்வு காரணமாக தெய்வமாக ஆக்கப்பட்டிருப்பார்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)