புராண கதை மரபு ஒரு பெரிய அடுக்கு. அதற்கு அடியில் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு அடுக்கு. சமணம் அந்தப் புராணப் பின்னணியை எதிர்த்து அதற்கு மாற்றாக உருவாகி வந்தது. ஆகவே இந்து மதத்தில் இருக்கக்கூடிய நாட்டார் பின்னணி தெய்வங்களின் கதைகளை அது கையில் எடுத்துக் கொண்டது. அப்படி அது கையில் எடுத்துக் கொண்ட தெய்வம் தான் கண்ணகி. இன்னொரு நாட்டார் தெய்வம் தான் குண்டலகேசி. இவர்களெல்லாருமே மக்களால் முன்னரே தெய்வங்களாக வழிபடப்பட்ட சிறு தெய்வங்கள். அவற்றை எடுத்து அவற்றின் மேல் சமணத்தைக் கொடுத்து அந்த மக்களிடம் கொண்டு சென்றனர் சமணர்கள்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)