எல்லா உயிர்களிலும் பாலுறவுக்கு ஒரு எதிர்விசை அளிக்கும் பழக்கம் உண்டு. பெட்டைநாய் ஓட்டத்தில் தன்னை வென்று அடக்கும் நாயைத்தான் ஏற்கும். பிற நாய்களுடன் அந்த ஆண்நாயை சண்டையில் தள்ளி அது ஜெயித்து வரவேண்டும் என எதிர்பார்க்கும். ஆண்யானை பெண்யானை பார்ப்பதற்காக பெரிய மரங்களை மத்தகங்களால் முட்டி கொம்புகளால் குத்திச்சாய்ப்பதைக் காணலாம். ஆடுகள் மண்டை உடைய முட்டிக் கொள்கின்றன. தரமான ஆணின் வாரிசுகள் உருவாகவேண்டும் என்பதற்காக இயற்கையே உருவாக்கிய முறை இது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)