எல்லோருமே திருடர்களாக இருந்த ஒரு நாடு இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து திருடுவார்கள். திருடியதை மூட்டை கட்டிக்கொண்டு விடியற்காலையில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவார்கள்; வந்து பார்க்கும்போது தங்களுடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள். ஆகவே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்தார்கள். யாருக்கும் எந்த இழப்பும் இல்லை; ஏனென்றால், ஒவ்வொரு நபரும் அடுத்தவரிடமிருந்து திருடினார்; அடுத்தவர் இன்னொருவரிடமிருந்து திருடினார்;
...more

