மீண்டும் பெற முடியாதபடி மகிழ்ச்சியை இழந்துவிட்டோம் என்ற நம்பிக்கையில்தான் உண்மையான மகிழ்ச்சி ஒருவேளை இருக்கலாம். அதன்பிறகு நம்பிக்கையோ, பயமோ இல்லாமல் நிலைத்த தன்மை பெற்ற சிறுசிறு சந்தோஷங்களை அனுபவிக்க இயலும் மனநிலையோடு வாழ்க்கையில் பயணம் செய்யத் தொடங்குகிறோம்.

