“நாம் குழந்தைகளைப் பெறும்போது நாம் நாட்டைப் பற்றி சிந்திக்கிறோமா? நம்முடைய குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம்....சரி, அவர்கள் பிறந்துதான் ஆகவேண்டும்; அவர்கள் வாழத் துவங்கும்போது நம்முடைய வாழ்க்கையையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் உண்மை. நாம்தான் அவர்களுக்குச் சொந்தமே தவிர அவர்கள் எப்போதுமே நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இருபது வயது ஆகும்போது நாம் எப்படி அந்த வயதில் இருந்தோமோ அதேபோல அவர்கள் இருக்கிறார்கள். நமக்கும் ஒரு அப்பா, ஒரு அம்மா இருந்தார்கள்; ஆனால் வேறுபல விஷயங்களும் இருந்தன... பெண்கள், சிகரெட்டுகள், இதம்தரும் மாயைகள், புது உறவுகள்... அப்புறம் நாடு; நம்முடைய

