Kindle Notes & Highlights
சோகமான விஷயங்கள் மட்டுமே எனக்குச் சொல்ல இருக்கின்றன. நான் எந்தத் தீங்கைச் செய்தேன்? என் மிகப்பெரிய குற்றம் எது?
Premanand Velu liked this
எல்லோருமே திருடர்களாக இருந்த ஒரு நாடு இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து திருடுவார்கள். திருடியதை மூட்டை கட்டிக்கொண்டு விடியற்காலையில் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவார்கள்; வந்து பார்க்கும்போது தங்களுடைய வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் காண்பார்கள். ஆகவே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்தார்கள். யாருக்கும் எந்த இழப்பும் இல்லை; ஏனென்றால், ஒவ்வொரு நபரும் அடுத்தவரிடமிருந்து திருடினார்; அடுத்தவர் இன்னொருவரிடமிருந்து திருடினார்;
...more
ஆண்களுக்கு வாழ்க்கை என்பது வேரோடிப்போன பழக்கங்களின் ஒரு தொடரோ? தொடரில் ஒரு பழக்கம் அறுந்தால் குழப்பமும் தோல்வியும் மட்டுமே விளையும்.
மீண்டும் பெற முடியாதபடி மகிழ்ச்சியை இழந்துவிட்டோம் என்ற நம்பிக்கையில்தான் உண்மையான மகிழ்ச்சி ஒருவேளை இருக்கலாம். அதன்பிறகு நம்பிக்கையோ, பயமோ இல்லாமல் நிலைத்த தன்மை பெற்ற சிறுசிறு சந்தோஷங்களை அனுபவிக்க இயலும் மனநிலையோடு வாழ்க்கையில் பயணம் செய்யத் தொடங்குகிறோம்.
“நாம் குழந்தைகளைப் பெறும்போது நாம் நாட்டைப் பற்றி சிந்திக்கிறோமா? நம்முடைய குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம்....சரி, அவர்கள் பிறந்துதான் ஆகவேண்டும்; அவர்கள் வாழத் துவங்கும்போது நம்முடைய வாழ்க்கையையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் உண்மை. நாம்தான் அவர்களுக்குச் சொந்தமே தவிர அவர்கள் எப்போதுமே நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இருபது வயது ஆகும்போது நாம் எப்படி அந்த வயதில் இருந்தோமோ அதேபோல அவர்கள் இருக்கிறார்கள். நமக்கும் ஒரு அப்பா, ஒரு அம்மா இருந்தார்கள்; ஆனால் வேறுபல விஷயங்களும் இருந்தன... பெண்கள், சிகரெட்டுகள், இதம்தரும் மாயைகள், புது உறவுகள்... அப்புறம் நாடு; நம்முடைய
எதற்கும் சார்பாகவோ எதிராகவோ நிலைப்பாடெடுப்பது உண்மையில் ஒரு விஷயமேயில்லை. தன் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் எதிர்த்தரப்பின் நியாயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதையும் மீறி தன் தரப்பை நிறுவுவதே சிறந்த வாதமாக இருக்கமுடியும்.
பொதுவாகவே மனித மனம், தெரிந்துகொள்ளவோ தெளிவடையவோ விவாதிப்பதை விடவும் எடுத்த நிலைப்பாட்டைத் தீவிரமாக முன்வைத்து தன்னையறியாமல் வெல்ல முயல்வதில்தான் முனைப்பைக் காட்டுகிறது - போரைப் போலவே

