காத்தவராயன் முகம் எந்த உணர்ச்சியைக் காட்டுகிறதென ஊகிக்க முடியவில்லை. “சாவு உண்மைதான். ஆனால் நாங்கள் எப்போது வாழ்ந்தோம்? அப்படி வாழ்வதைவிட இந்தச்சாவு எந்த வகையில் குறைந்து போய்விட்டது? பஞ்சம் நல்லதுதான் சர். ஆமாம், உண்மையாகத்தான் சொல்கிறேன். ஒருவேளை இந்தப் பஞ்சம் எங்கள் இனத்துக்கு இறைவன் அளித்த நல்ல வாய்ப்போ என்னவோ.