More on this book
Community
Kindle Notes & Highlights
ஏய்டன் நீலமேகத்தையே பார்த்தான். என்ன ஒரு நிமிர்வு, கம்பீரம். முகத்தில் இறுக்கமான ஓர் உறுதி. இவனால் தீண்டப்படாதவன் என்றும் மிருகங்களைவிடக் கீழானவன் என்றும் சொல்லப்படும் இன்னொருவன் அச்சு அசல் இவனைப்போலவே இருக்கிறான். ஒரே வயிற்றுக்குழந்தை போலவே தோன்றுகிறான். ஆனால் இவன் பட்டினியால் செத்தாலும் ஒரு வாய் உணவை அவனிடமிருந்து பெறமாட்டான். விசித்திரம்!
It happened to me many a times. The oppressor looks exactly like the one being oppressed. WTF is wrong with you is something I always wanted to ask!
காத்தவராயன் முகம் எந்த உணர்ச்சியைக் காட்டுகிறதென ஊகிக்க முடியவில்லை. “சாவு உண்மைதான். ஆனால் நாங்கள் எப்போது வாழ்ந்தோம்? அப்படி வாழ்வதைவிட இந்தச்சாவு எந்த வகையில் குறைந்து போய்விட்டது? பஞ்சம் நல்லதுதான் சர். ஆமாம், உண்மையாகத்தான் சொல்கிறேன். ஒருவேளை இந்தப் பஞ்சம் எங்கள் இனத்துக்கு இறைவன் அளித்த நல்ல வாய்ப்போ என்னவோ.