Shobasakthi's Blog, page 2
April 19, 2024
இமிழ் : எழுத்தாளர்கள் தேர்வும் தொகுப்பும்
51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலரான ‘இமிழ்’ குறித்தும், தொகுப்பில் எழுதியிருக்கும் எழுத்தாளர்களைக் குறித்தும் மார்ச் 21-ம் தேதி, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தொகுப்புக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்த முறைமை குறித்துக் கேள்விகளும் விமர்சனங்களும் முகநூலில் பரவலாக வைக்கப்பட்டன. மலருக்கான கதைகளைக் கோரி ஏன் ‘பொது அறிவித்தல்’ கொடுக்கவில்லை என்பதும் அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வியாக இருந்தது. தொகுப்பில் இடம்பெற்ற இருபத்தைந்து எழுத்தாளர்களையும் தேர்வு செய்தவர்கள் என்ற முறையில் தர்மு பிரசாத்தும் நானும், பத்தொன்பது உறுப்பினர்களைக் கொண்ட 51-வது இலக்கியச் […]
Published on April 19, 2024 00:10
April 15, 2024
இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்
I do not agree with a word that you say, but I will defend to the death your right. -Voltaire ‘இமிழ்’ கதைமலரில் யதார்த்தனின் கதை இடம்பெற்றது, ‘இமிழ்’ விமர்சனக் கூட்டத்தில் எழுத்தாளர் கிரிசாந் கலந்துகொள்வது ஆகியவை குறித்து முகநூலில் மதுரன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு நான் அளித்தல் பதில் இங்கே: இலக்கியச் சந்திப்பில் என் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருந்தேன். இங்கே இன்னும் சற்று விரிவாக: 1. யதார்த்தன் […]
Published on April 15, 2024 00:03
February 13, 2024
சித்திரப்பேழை
‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் […]
Published on February 13, 2024 05:47
November 9, 2023
ஆறாங்குழி
இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் […]
Published on November 09, 2023 01:30
June 19, 2023
காலப்புள்ளி
‘கருப்புப் பிரதிகள்’ வெளியிட்டிருக்கும் ‘டானியல் அன்ரனி கதைகள் – அதிர்வுகள் – கவிதைகள்’ தொகுப்பு நூலுக்கு எழுதிய முன்னுரை: நமது கையிலிருக்கும் இந்தச் சிறிய பிரதி டானியல் அன்ரனி அவர்களுடைய மொத்த எழுத்துகளின் ஒரு பகுதியே. கண்டடைய முடியாதவாறு தொலைந்துபோயிருக்கும் கணிசமானளவு சிறுகதைகளையும், எழுதி முடித்தும் அச்சேறாத ‘இரட்டைப்பனை’, ‘செவ்வானம்’ நாவல்களையும் கொண்டது அவரது படைப்புத் தடம். அவர் ‘அமிர்த கங்கை’ இதழில் எழுதத் தொடங்கியிருந்த குறுநாவல் தொடருக்கு ‘தடம்’ எனப் பெயரிட்டிருந்தார். அது முழுமையடையாமல் ஓர் […]
Published on June 19, 2023 02:37
May 22, 2023
கலா கலகக்காரர்
என்னுடைய பதினான்காவது வயதில், நான் முதன்முறையாக மு.நித்தியானந்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டேன். இலக்கியவாதியாக அல்லாமல், ஒரு விடுதலைச் செயற்பாட்டாளராகவே அவர் எனக்குப் பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அவரது உறவாலும், புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களிலே அவர்களுக்கு உற்ற துணையாகவிருந்ததாலும் நித்தியானந்தன் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானவர் என்பதை வாரத்திற்கு ஒருதடவையாவது பத்திரிகைகள் எழுதிக்கொண்டேயிருந்தன. வெலிகடைச் சிறையில் நடந்த படுகொலைகளின் போது, ஆயுதமேந்திய கொலையாளிகளை வெற்றுக் கரங்களால் எதிர்த்துத் […]
Published on May 22, 2023 23:47
May 14, 2023
வேர்ச்சொல் – விடுதலை சிகப்பி – வெந்து தணிந்தது காடு
சென்னையில், கடந்த மாத இறுதியில் ‘நீலம் பண்பாட்டு மையம்’ ஒருங்கிணைத்த வேர்ச்சொல்- தலித் இலக்கியக் கூடுகை நிகழ்வில் ‘ஈழத் தலித் இலக்கியம்’ குறித்த அமர்வில் தோழர்கள் மு.நித்தியானந்தன், தொ. பத்திநாதன் ஆகியோரோடு நானும் உரையாற்றினேன். நேரப் பற்றாக்குறை காரணமாக, என்னுடைய உரை முழுமையுறவில்லை என்றே உணர்கிறேன். எனினும் கிடைத்த நேரத்திற்குள், ஈழத்தில் கடந்த அய்ம்பது வருடங்களில் சாதியம் எவ்வாறு தந்திரமாக – விடுதலைப் போராட்ட காலத்தையும் கடந்து – இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை விளக்க முற்பட்டேன். ஏனெனில், ஈழ […]
Published on May 14, 2023 06:57
April 9, 2023
கருங்குயில்
தன்னுடைய வீட்டின் மதிற்சுவரில், ஏன் சுற்றுலாப் பயணிகளான வெள்ளைக்காரிகள் விழுந்து புரண்டு முத்தமிடுகிறார்கள் என்பது ரவிசங்கருக்குப் புரியவேயில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த அந்த மதிற்சுவரில், இப்போது எண்ணிப் பார்த்தால் குறைந்தது நூறு லிப்ஸ்டிக் அடையாளங்களாவது இருக்கும். ஒரே நிறத்தில் அந்த அடையாளங்கள் பதிந்திருந்தால் கூட ஒருவேளை அதுவொரு அழகாக இருந்திருக்கக் கூடும். ஆனால், சிவப்பு, ஊதா, பச்சை, கருப்பு என எல்லா வண்ணங்களிலும் அந்தச் சுவரில் உதட்டு அடையாளங்கள் பதிந்து, குரங்கு அம்மைநோய் வந்தவனின் […]
Published on April 09, 2023 09:27
March 28, 2023
கதையின் மொழி இசை போன்றிருக்க வேண்டும்
இச்சா, BOX, கொரில்லா உள்ளிட்ட முக்கிய நாவல்களை எழுதிய எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தளத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டது. உரையாடியவர்: வாசுகி ஜெயஶ்ரீ – இலங்கையில் உங்களது சொந்த ஊர் எது? இலங்கையின் வடதிசையில் ‘பாக்’ நீரிணையில் மிதக்கும் சின்னஞ்சிறிய தீவுகளில் ஒன்றான ‘லைடன்’ தீவில் அமைந்துள்ள ‘அல்லைப்பிட்டி’ கிராமம் ஒருகாலத்தில் என்னுடைய ஊராக இருந்தது. அங்கேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இப்போது என்னுடைய குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. எங்களுடைய குடிசை வீடும் இராணுவத்தால் […]
Published on March 28, 2023 13:32
ONE WAY
அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு […]
Published on March 28, 2023 13:20
Shobasakthi's Blog
- Shobasakthi's profile
- 57 followers
Shobasakthi isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
