தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக்கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.
The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.
He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.
His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.
"அனுபவம் வேண்டுமா - இளமையை இழ. ஆயுள் வேண்டுமா - போகம் இழ. கவிதை வேண்டுமா-உன்னை இழ காதல் வேண்டுமா - இதயத்தை இழ வளர்ச்சி வேண்டுமா - தூக்கத்தை இழ. வரவு வேண்டுமா - வியர்வையை இழ."
My first poetry based novel in Tamil thanks to Kavitha and it was an unique experience! When poets tell stories, it is not the events but how it is narrated that grabs the attention. However, in this 'odyssey' of sorts, the despair is very real and you can almost the taste the sea water in the words and smell the salty air.
The fishermen along with the reporter Kalaivannan and his timid lover Tamilroja go out to sea to make Tamilroja lose her fear of water. And things go horribly bad. Despite Kalai's positivity and hope, over the days, we feel for the crew. Hope is a beautiful thing, but the tantalizing heartbreaks at the end of each chapter - so near, yet so close make you wish it didn't have to be this difficult.
Vairamuthu's words have the potency of unadulterated drug. The chapters of positivity and the pro-life philosophy are expressed beautifully. Added joy of playing film song bingo where the seeds of some of the beautiful songs can be found here. Kalai's song for resilience deserves as special mention.
வைரமுத்து அவர்களின் ஒரு வித்தியாசமான நாவல் கவிதை நடையில் ஒரு நாவல். இது போன்று கவிதை நடையில் ஒரு நாவலும் படித்ததில்லை. விஞ்ஞானம்,காதல்,மனித உணர்வுகள், சமுகம் என அனைத்தும் எழுதமுடிகிறது வைரமுத்துவால். நாவலில் வரும் ஒவ்வொரு வரியும் அழகானவை.
"தன்மேல் விழும் மண்ணைச் சோதனை என்று சொன்னதுண்டா விதை?"
"இயற்கை தாலாட்டினால் இந்தக் கடல் இவர்களுக்குத் - தொட்டில், இயற்கை தள்ளிவிட்டால் இந்த கடல் - கல்லறை"
"வாழ்வைக் கற்பனை செய். சாவைக் கற்பனை செய்யாதே..."
"உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு. உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்."
என இன்னும் பல வரிகள் உள்ளன.
சிறுது செயற்கையாக இருந்தாலும் அவை படிக்கும்போது பெரிதாக தெரிவதில்லை...
P.S: கலைவண்ணன் படகில் பாடும் பாடல் வரிகள், A.R. Rahman இசையில் கடல் படத்தில் வரும். அந்த பாடல்
"சித்திரை நிலா "
நாவலில் வரும் வரிகள்
மனிதன் நினைத்தால் வழி பிறக்கும் மனதில் இருந்து ஒளி பிறக்கும் புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால் தான் பூமியும் கூட தாழ் திறக்கும்
கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும் கலங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும் துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும் தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும் சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் தோனிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்
மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தலைக்கும் மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் பூமியை திறந்தால் புதையலும் இருக்கும் பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும் (மரம் ஒன்று)
சிறிது விஞ்ஞானம், சிறிது அறிவியல், சிறிது காதல், சிறிது பகுத்தறிவு, நிறைய நம்பிக்கை கொண்ட அழகு தமிழில் அருமையான கதை.
I have to thank Girish. Because of him, I ended up reading Thanneer Desam, a story written in poetic Tamil. Even though I enjoyed many film songs by Vairamuthu, this is the first time I am reading his literary works.
Enjoyed the philosophy and lyrical poetry lines initially, suffered the plight alongside the team that went into sea, prayed for their safety and agonized over sufferings until the end.
காதலிக்கிறது சுலபம். காதலிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். பெண்களுக்கு அப்பறம் அதை செய்ய கூடியவர்கள் கவிஞர்கள் மட்டும் தான். அந்த வகையில் என்னைக் காதல் கொள்ள வைத்த காவியம். கடல் மேல் காதல். "வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்று செறித்து நின்று சிரிக்கும் நிஜம்". அடடா!
தண்ணீர் தேசம் - கற்பனை நதிகளின் சங்கமம். தென்றலாய் துவங்கி புயலாய் மாறிய 3 மணி நேர காதல் கடற்பயணம். தமிழோடு இத்துனை காதலா! காதலோடு இத்துனை விஞ்ஞானமா!! விஞ்ஞானத்தோடு இத்துனை மெஞ்ஞானமா!!!
தமிழ் மேல் <3 கலைவண்ணன் மேல் <3 குட்டி எலியின் மீதும் காதல் பிறந்ததடா <3
"தண்ணீரைக் கூட சல்லடை கொண்டு அள்ளலாம்: அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்." . தண்ணீர் தேசம் கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் எழுதிய நாவல். கடலை நேசிக்கும் கலைவண்ணன்; சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தினால் தண்ணீரைக் கண்டாலே அஞ்சி நடுங்கும் தமிழ்ரோஜா. அவளது பயத்தைப் போக்க நினைக்கிறான் கலை. ஒரு நாள் படகில் மீனவர்களுடன் கடலை பார்க்க இருவரும் செல்கின்றனர். பயத்தை மறந்து அவள் மெல்ல மெல்ல கடலை ரசிக்க ஆரம்பித்தபோது எதிர்பாராத விதமாக படகு பழுதடைகிறது. கரை சேர வழியின்றி போதுமான அளவு உணவு குடிநீர் இன்றி வாடும் இவர்கள் உயிர் பிழைத்தார்களா? தமிழ் தன் பயத்தை வென்றாளா? என்பதை செந்தமிழ் - விஞ்ஞானம் இரண்டும் சரிவர குழைத்து எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு. . வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நம்பிக்கை இழக்காமல் போராட கற்று கொடுக்கும் கலை, அவன் சொல்லும் புள்ளிவிவரங்களைக் கேட்டு ஆச்சரியப்படும் சிறு பிள்ளையாய் – ஆபத்திலிருந்து அவனை மீட்க எதற்கும் அஞ்சாத வீரமங்கையாய் தமிழ்ரோஜா, அன்பை மட்டுமே பொழியும் மீனவர் சகோதரர்கள் என அனைவரின் பாத்திரப் படைப்பு சிறப்பு. . வாழ்க்கையின் எதார்த்தங்களையும் மீனவர்கள் வாழ்வியலையும் எளிய நடையில் எனக்கு உணர்த்தியதற்காக இந்நூலுக்கு 5⭐
Frankly speak,When i purchased this book,I thought that i did mistake. I dint open this for few months.Today morning i don't have any other option to read. Just i opened to it and start to read. Then i realized that I couldn't move away from this book without finishing it off. Vairamuthtu is great. We can imagine the story while reading.Its really incomparable with any books which i have read. Very very interesting one and good writing.
இத படிச்சு முடிச்சதும் எனக்கு தோணுனது,”செவனேனு கடல கரைல ஒக்காந்து பாத்துட்டு இருந்த��ள தைரியத்த வளக்குறேன்,வாழ்க்கைய காட்டுறேன்னு வம்படியா இழுத்துட்டு போய் இப்டி புயல்ல பொலம்ப வெச்சுட்டானே!😅”தமிழ் ரோஜாவை தர்க்கம் செய்து இழுத்துச் செல்லும் கலைவண்ணன் இக்காலத்தின்படி அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை பலவந்தப்படுத்தும் ஒரு toxic காதலனாகவே தெரிகிறான்!😂
புத்தகம் : தண்ணீர் தேசம் ஆசிரியர் : வைரமுத்து பக்கங்கள் :264 பதிப்பகம் :சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
வைரமுத்து அவர்களின் எழுத்தின் தீவிர ரசிகை நான். அவரின் சில கவிதை புத்தகங்கள், கதைகள் வாசித்து இருக்கிறேன். ஆனால் கவிதை வடிவிலான கதையின் அழகில் மூழ்கித் திளைக்கச் செய்தது இந்த தண்ணீர் தேசம் தான்.
கடல் தான் இந்தக் கதையின் மூலம். கடற்காதலனான நாயகன் கலைவண்ணன், தண்ணீரைக் கண்டாலே தலை தெரிக்க ஓடும் நாயகி தமிழ்ரோஜா.இவர்கள் இருவரும் சலீம், பாண்டி, பரதன், இசக்கி என்ற நான்கு மீனவர்களுடன் படகில் கடலுக்குள் ஒரு சிறு பயணம் மேற்கொள்ள எத்தனிக்க அது எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள் நிறைந்த நெடும்பயணமாக மாறுகிறது. கடலன்னை அவர்களுக்கு வைத்த அனைத்து சோதனைகளிலும் வெற்றிகரமாக மீண்டார்களா? தண்ணீர் தேசத்தில் இருந்து உயிருடன் கரை சேர்ந்தார்களா என்பதே இந்த கதை/கவிதை.
தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம் என்று புத்தகத்தின் பின் அட்டை பிரஸ்தாபிக்க, கதையில் எப்படி விஞ்ஞானம் சேர்க்க முடியும் என்று வியக்க இந்த புத்தகத்தை ஒரு தகவல் பெட்டகமாக மாற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கவிப்பேரரசு. கடலையும் தமிழையும் அறிவியல் தகவல்களையும் மிகவும் நேசிக்கும் எனக்கு இந்த புத்தகம் ஒரு முக்கனி விருந்தாக தித்தித்தது. கூடவே கடற்காற்றும், பாதம் தொடும் கடல் அலைகளின் நெகிழ்வும் பக்கங்களினூடே நம்மீது கடல் வாசனை.
#295 Book 56 of 2024- தண்ணீர் தேசம் Author- வைரமுத்து
“இது ஓர் அனுபவம். படபடப்பு என்பது உயிருக்கு நேரும் உயர்ந்த அனுபவம். படபடப்பு இல்லையென்றால் பரிமாணம் இல்லை.”
வைரமுத்து எழுதிய ஒரு விறுவிறுப்பான விஞ்ஞாற நாவல். மீன்பிடிக்க கடலுக்குள் இறங்கும் மீனவர்களோடு கலைவண்ணன்,தமிழ்ரோஜா என்ற காதல் ஜோடியும் அவர்களோடு கப்பலில் ஏறி கடலுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையில் தள்ளப்பட்டும் எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதே இக்கதை. ஆழமான சமூகப்பிரச்சினைகள், மனிதர்களின் துன்பங்கள், மற்றும் இயற்கை குறித்த நுண்ணுணர்வுகள், இந்நாவலில் படிப்பவரை ஆழமாக யோசிக்கச் செய்யும். சாதாரண வாழ்க்கையில் தொடங்கிய கதை, தண்ணீருக்காக நடக்கும் போராட்டங்களின் மூலம் நம் உணர்ச்சிகளை கவர்ந்திழுக்கிறது.
காதல், அறிவியல், கவிதை, நட்பு, இயற்கை, வாழ்வியல் என சகலத்தையும் தொட்டுப் பார்க்கிறது இந்த புத்தகம். இந்த புத்தகத்தின் எழுத்து நடை தான் இதன் மிகப் பெரிய பலம். தமிழ்ரோஜா-எல்லாவற்றிர்கும் பயம், தைரியம் இல்லாமல் இருக்க, அவள் காதலன் அவளுக்கு தரும் நம்பிக்கை, தைரியம், காதல் பேரழகு! ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிலைத்து நிற்கும். அடுத்து என்ன என்ற பதட்டம், விறுவிறுப்போடு நகர்கிறது கதை. தமிழில் நிச்சயம் இது ஒரு காவியமே!
தண்ணீர் தேசம், ஓர் எளிய கதை அல்ல. இது சமூகச் சிந்தனை நிறைந்த ஒரு முக்கியமான கருத்தோவியமாகும். விலகிப் போகும் இயற்கையின் பருவ மாற்றங்களால் மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான நெகிழ்ச்சி மற்றும் கவலையை இந்த நூல் அழகாக தத்ரூபமாக உணர்த்துகிறது.
This isn't a review. Just a fan-note! A long one, though.
Definitely the most beautiful piece of work that I've read till date. Like a kid jumping with joy, gleefully unwrapping those tiny little birthday presents, I was filled with ecstasy and awe as I read this book.
I wanted to cherish all those beautiful snippets so that I could reread them every now and then. Below are some excerpts that I loved-
"அரசாங்கம் செய்ய முடியாததை மழை செய்தது - பள்ளத்தில் மூழ்கிய பாமர மக்கள் பள்ளியில் ஒதுங்கினார்கள்."
"நோய் என்பதொரு கொடை. தறிக்கெட்டோடும் வாழ்க்கையில் அது ஒரு மெல்லிய வேகத்தடை. வாழ்வின் பெருமையை உயர்த்துவதும் - உறுப்புகளின் அருமையை உணர்த்துவதும் - நேற்றையும் இன்றையும் நேசிக்க வைப்பதும்- தன்னைச் சார்ந்தவர்பற்றி யோசிக்க வைப்பதும்- ஒரு நிமிஷச் சொட்டின் விலை என்ன என்று நிறுத்திச் சொல்வதும்- செலுத்தப்படாத அன்பைச் செலுத்தச் செய்வதும்- திமிர் கொண்டோடும் தேகத்தை ஞானப்பாதைக்கு அழைத்துச் வருவதும்- மனிதனுக்குள்ளிருக்கும் சிங்கம்புலிகளைத் துரதியடிப்பதும் - கடந்தகாலத் தவறுகளை எண்ணிக் கடைவிழியில் நீரொழுக வைப்பதும் - நோய்தான். ஆகவே உடம்பே. அவ்வப்போது கொஞ்சம் நோய் பெறுக. நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம். ஆனால் நோயும் ஒரு செல்வமென்று பட்டுத்தெளி, மனமே."
"மழையில் நனைந்த இரவை சூரியன் வந்து துவட்டி விட்டது."
"நிகழும் வரைக்கும் தான் ஒன்று அதிசயம். நிகழ்ந்த பிறகு அது சம்பவம்."
"காரணம் கண்டறியாதவரை ஆன்மீகம். காரணம் கண்டறிந்தால் விஞ்ஞானம்."
"இயங்காத வாழ்க்கையில் இன்பமில்லை. இயங்கு. இயங்கு மனிதனே. இயங்கு. வெற்றியை நோக்கியாவது - தோல்வியை நோக்கியாவது இயங்கிக்கொண்டே இரு. இயக்கமே வாழ்க்கையின் முதல் அடையாளம். "
"சொல்லின் அர்த்தம் தீர்மானிப்பது சொல்லல்ல. இடம். ஒரே ஒரு முத்தம் கொடு. -இந்தத் தொடருக்குக் கட்டிலில் பொருள் வேறு. தொட்டிலில் பொருள் வேறு. பாடையில் பொருள் வேறு."
"அவர்களின் திருடப்பட்ட சந்தோஷத்தின் முதல் தவணை திருப்பித் தரப்பட்டது."
"சுமப்பவனுக்குத்தான் தெரியும் சாலையின் தூரம். விழிப்பவனுக்குத்தான் தெரியும் இரவின் நீளம்."
"எரிந்துவிட்டது வீடு இனி தெளிவாய்த் தெரியும் நிலா.."
"கண்ணீர்.. திட உணர்ச்சிகளின் திரவமொழி."
"மார்கழிமாத வெயில் மறைவதற்குள் துணிகாய வைக்கத் துடிக்கும் ஒரு சலவைக்காரியை போல "
"பாலில்லாத தேநீர். அவள் களைப்பை மாற்றும் கறுப்புத் தாய்ப்பால்."
"படபடப்பு என்பது உயிருக்கு நேரும் உயர்ந்த அனுபவம். படபடப்பு இல்லையென்றால் பரிணாமம் இல்லை. அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை. நம் வாழ்க்கைமுறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே நம்மீது திணித்தது. யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக்கொள்ளுமாறு நம்மீது துப்பியது. ஆகவே தாத்தாக்களி��் நகல்களாகவே தமிழன் தயாரிக்கப்பட்டான். எனவே பல நூற்றாண்டுகளாக இந்த இனம் இருந்த இடத்திலேயே இருந்தது. சாதிக்கும் மூளையிருந்தும் சோதிக்கும் முயற்சி இல்லை. வாழ்நாளில் 66000 லிட்டர் தண்ணீர் குடித்தான். ஆயுளில் மூன்றில் ஒருபங்கு தூங்கினான். நான்குகோடி முறை இமைத்தான். நாலரை லட்சம் டன் ரத்தத்தை இதயத்தால் இறைக்கவைத்தான். 35 ஆயிரம் கிலோ உணவு- அதாவது எடையில் இந்திய யானைகள் ஏழு தின்றான். மரித்துப் போனான். இதற்குத்தானா மனிதப்பிறவி? "
"மேலே நீலவானம் - நீளவானம். கீழே நீலக்கடல் - நீளக��கடல்."
"வீழ்வது அவனாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"
"தீராது. தண்ணீர் பூமிக்கு வெளியே போய்விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் பருகுவது பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீரைத்தான். தண்ணீரும் காதலைப்போலத்தான். அதன் மூலகங்கள் அழிவதில்லை."
"நமக்குள் ஆண்-பெண் என்ற பேதம் நம் அவசரத்தேவைக்காக மட்டும் இருக்கட்டும். மற்றபடி பிறப்புமுதல் இறப்புவரை உணர்ச்சியும் வலியும் ஒன்றுதான்."
"வெள்ளிக்கரண்டியோடு பிறந்தவளுக்கு ஏன் வேலையற்றவேலைஎன்பாய். ஓர் ஆணியைச் சுயமாய் அடிக்கத் தெரியாதவளுக்கு வெள்ளிக்கரண்டி சொந்தமாய் இருக்கக்கூடாது. அனுபவங்கள் தடுப்பூசிகள். போட்டுக்கொள்."
"இயல்புகளை ஏற்றுக்கொள்ளலாம். திரிபுகளை ஏற்றுக்கொள்ள முடியாது."
"அதைவிட சுகமாக அம்சத்வனிராகம்கூட அவள் பெயரை உச்சரித்திருக்க முடியாது. காதல் அழைக்கும் போதுதான் பெயர்வைத்ததன் பெருமைபுரிகிறது."
"ஆக்டோபஸ அலைகள் என்னை அள்ளிக் கொண்டோடிவிட்டால்? அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே."
"ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது!""
"இந்தச் செவிட்டுக் கரைகளோடு அந்த அலைகள் இத்தனை யுகங்களாய் அப்படி என்னதான் பேசும் என்று யோசிக்கிறேன்."
literature at its height... language at her peak... started with urge to drink my language, read with nuances of the sea, slept with the characters safety in mind, ended with philosophical tears in heart and eyes... no more words to describe... a book at its best. Master piece of a poet.
1996ல் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளியான கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு கதை.
நாயகன் கலைவண்ணன் ஒரு பத்திரிகையாளன் நாயகி தமிழ்ரோஜா கல்லூரி மாணவி. இருவரும் காதலர்கள். கலைவண்ணன் போராட்ட குணம் கொண்ட, வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தால் தான் முன்னேறி வர முடியும் என்று நம்புகிற ஒரு இளைஞன். தமிழ்ரோஜா பணக்கார வீட்டுப்பெண். மென்மையான, கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவள். தமிழ்ரோஜாவை தன்னுடைய போராட்ட வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டி நாயகன் செய்யும் சில விஷயங்கள் விபரீதத்தில் முடிகிறது. அதிலிருந்து உயிரோடு தப்பித்தார்களா இல்லையா என்பதே கதை. இவர்களோடு கடல் தண்ணீர் இக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
என்னைப் பொருத்தவரையில் புனைவின் மிகை உணர்ச்சி வெளிப்பாடுகளே கவிதைகள். இந்தக் கதையில் அந்த மிகை உணர்ச்சியை நான் முழுமையாக உணர்ந்தேன். காதல், கொள்கை, கடல், தண்ணீர், உலகம் என பலவற்றின் அறிவியல் மற்றும் வரலாற்று உண்மைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
காதலில் ஒருவர் இன்னொருவரை control செய்யலாமா? அப்படி control செய்வதற்கு எதுவும் அளவுகோல் உண்டா? மன ஈர்ப்பு குறையும் வரையிலா அல்லது உயிர் போகும் வரை என்று அளவுகோல் வைத்துக்கொள்ளலாமா? என்னைப் பொருத்தவரையில் இந்த அளவுகோல் தனிப்பட்ட முறையில் நபருக்கு நபர் மாறும் என்று நினைக்கிறேன். மீனவ நண்பர்களோடு சேர்ந்துகொண்டு நாடகமாடி கடலில் தள்ளிவிடப்பாடும் கலைவண்ணன், அதைப் பார்த்த தமிழ்ரோஜா அவனை காப்பாற்ற வேண்டி (அவளுக்கு தண்ணீர் என்றால் பயம் வேறு) கடலில் குதிப்பாள். காதலுக்காக குதித்தாள் என்று பெருமைக் கொள்வதும், தான் நன்றாக தயார்படுத்திவிட்டதாக நினைத்து சந்தோஷப்படும் கலைவண்ணனைப் பற்றி என்னவென்று சொல்வது? 1996ல் எழுதப்பட்ட கதை தானே என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் Relationship Consultant என்று சொல்லிக்கொண்டு ஒருவர் "பார்ட்னரை control பண்ணலாம், sometimes hurt பண்ணலாம்னு" சொன்னது வேறு ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. இந்த கருத்திற்கு ஆட்சேபனைத் தெரிவித்து வந்த பதிவுகளையும் பேஸ்புக்கில் நான் பார்த்தேன். அதுவே ஒரு வித ஆறுதலாய் இருந்தது. So change in the way.
இந்த காதலை தள்ளி வச்சுட்டு பார்த்தா வாழ்க்கைத் தத்துவங்கள், உலகியல் ஒப்பீடுகள், வரலாற்றுத் தகவல்கள், மனதை உருக்கும் கவிதைகள்னு இந்த புத்தகத்தில பல நல்ல விஷயங்களும் இருக்கு. மனுஷ்யபுத்திரனின் "தாராவின் காதலர்கள்" புத்தகத்திற்கு பிறகு கவிதை நடையில் எழுதப்பட்ட கதை நூலை நான் படிப்பது இது இரண்டாவது முறை. வித்தியாசமான அனுபவம் என்றே சொல்வேன்.
This entire review has been hidden because of spoilers.
காதலன் கலைவண்ணன் காதலி தமிழ்ரோஜாவின் தண்ணீர் பயம் களைய அவளை கடல் அலையோடு விளையாட அழைக்கிறான் அவளோ மறுக்கிறாள் இவன் அன்போடு அள்ளித் தளுவி அவளை கடல் அலையில் அமிழ்த்த, மயக்கமடைகிறாள் தமிழ்ரோஜா. மருத்துவமனையில் மயக்கம் தெளிந்தவள் கதலினிடம் சண்டையிட்டு சமாதனமடைந்தாள். ஒரு நாள் ராயபுரம் கடற்கரையில் காதல் ஜோடிகள் கொஞ்சிக் கொண்டுடிருக்க அங்கு கலைவண்ணனை கண்ட மீனவ தோழர்கள்(இசக்கி, சலீம், பரதன், பாண்டி) கடல் பயணத்திற்கு இவர்களை அழைகிறார்கள். தமிழ்ரோஜாவை புதிய அனுபவ பயணத்திற்கு சம்மதிக்கவைத்து விசைபடகில்(இயந்திர மிதவை) ஏறி கடல்புகுந்தனர் காதலர்கள். பல கடல் மைல் கடந்தபின் விசைபடகின் இயந்திரம் பழுதடைந்து தண்ணீர்தேசத்தில் தனியாக தவிக்கிறார்கள் இந்த ஆறு மனிதர்களும், ஒரு சுண்டெலியும். இவர்கள் கரை மீண்டார்களா இல்லை கடலிலே மாண்டார்களா என்பது கதையின் இறுதி. கடலின் அச்சமூட்டும் கட்டுக்கதைகளுக்கான அறிவியல் விளக்கம் அறியாதவர்கள், தமிழ் மொழி இனிக்கும் என்பதை உணர விரும்புபவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
ஆஹா! தமிழ் இனிக்கும் என்பதை பலர் சொல்ல கேட்ட நான் இன்று உணர்ந்தேன் தண்ணீர் தேசத்து தமிழ் இனிக்கிறது. இதற்கு யார் காரணம், வைரமுத்து(கவிப்பேரரசு) என்ற கவிஞர். ஒரு கதையை கவிதை வடிவாக்கிய எழுத்து சிற்ப்பி. தமிழ் மொழி அறிந்த மக்களே மண்ணில் மாண்டுபோவதற்குள் ஒருமுறையேனும் இந்த புத்தகத்தை படித்து விடுங்கள். -கலைச்செல்வன் செல்வராஜ்.
தண்ணீர்தேசத்து கவிகளில் சில,
கடல்.... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
Thank you Abi for the recommendation :) கவிதை நடையில் நாவல் என்பது வைரமுத்து அவர்களுக்கே உரித்தான ஒன்று.விஞ்ஞானமும், அறிவியலும், கடல் அழகும், கடலறிவும், மீனவர் வாழ்க்கையும், பசியின் கொடுமையும், உணவின் அருமையும், கவிதையுமான அருமையான தமிழ் விருந்து தண்ணீர் தேசம். நூறு வரிகளை எடுத்துக் காட்டலாம் ஆனால் மனதில் நின்ற சில வரிகள் இதோ:
"சுமப்பவனுக்குத்தான் தெரியும் சாலையின் தூரம் விழிப்பவனுக்குத்தான் தெரியும் இரவின் நீளம்"
என்ன பண்ணியும் கலைவண்ணனின் பல கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. தண்ணீர் பயம் முற்றியவளை கடலுக்குள்ளே வற்புறுத்தி வரவழைப்பதும், அவளை ஒருவித அற்ப சூழ்ச்சியால் கடலுக்குள் குதிக்கத் தூண்டியதும், மழையில் நனையச் சொல்லி மரணத்தின் வாயிலுக்கு தள்ளியதும் எந்தக் காதலையும் சொல்லவில்லை. தன் வழியே உயர்ந்த வழி என்ற அகங்காரத்தை தான் கூறிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக" என் நீண்ட பயணத்திற்குத் தகுதியாக அவளைத் தாயரிக்க வேண்டும்" என்றும்" என்னிடம் விட்டுவிடுங்கள் எனக்கு அவளை இணை செய்து கொள்கிறேன்" என்று அவளின் தந்தையிடமே கூறுவது ஆதிக்கத்தின் பெரும் உச்சம்.
"தர்க்கம் வேறு; தர்மம் வேறு; சில குணங்களை எதிர்த்திட கூடாது; ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற அகத்தியரின் கருத்தையே ஆமோதிக்கிறேன்.
மனம் நிறைத்த தமிழ் கவிதைகளுக்கு ஐந்து நட்சத்திரங்கள் என்றாலும் கதையின் நாயகனை பிடிக்காத படியால் 3.5 (rounded to 4) நட்சத்திரங்கள்.
This entire review has been hidden because of spoilers.
ஓரிரு நாட்களில் புத்தகத்தை முடித்து விட்டேன். சிறப்பான தொடக்கம் சிறப்பான வழித்தடம்.
அன்பு பாசம் பரிவு காதல் வன்மை வெறுப்பு மரண பயம் எல்லாவற்றையும் ஒன்று சேர அமைத்த ஒரு கதை தண்ணீர் தேசம். தண்ணீருக்குள் சிக்கித்தவிக்கும் 6 பேரின் வாழ்க்கை கதை.
ஒரு சில இடங்களில் எதார்த்தத்தை மறந்து விட்டார் கவிஞர் கடலில் தத்தளித்த அவர்களுக்கு தண்ணீரும் உணவும் தேவைதான் ஆனால் அந்த தண்ணீரையும் உணவையும் கடல் நீரிலிருந்து மீனிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் உத்தி இங்கே பலருக்குத் தெரியும்.
அந்த சிறிய யுத்தியை இந்த விஞ்ஞான காவியத்தில் இடம்பெறாமல் இருப்பது கதையின் போக்கில் ஒரு தளர்வை ஏற்படுத்துகிறது.
பெர்முடா முதல் பசுபிக் பெருங்கடல் வரை பேசும் இக்கதையில் அது போன்ற விஷயங்கள் கதைக்கு பலம் சேர்க்கவில்லை. ஒரு சலிர்ப்பை எற்படுத்துகிறது.
இன்னும் சிறப்பாக இந்த யுத்திகளை கையாண்டு இருக்கலாம்.
நாவல் படித்தி இருக்கிறேன். கவிதை படித்து இருக்கிறேன். கவிதை கலந்த ஸ்டைலில் நாவல் படிப்பது இதுவே எனக்கு முதல்முறை.
கடல் நேசம் கொண்ட காதலன், தண்ணீர் பயம் கொண்ட காதலி, நான்கு மீனவர்களுடன் கடலில் சிக்கிக்கொள்ள... இவர்கள் கடலில் இருந்து மீண்டு கரை சேர்ந்தார்களா? அல்லது கடலுக்குள் இரையானார்களா? என்பதே வைரமுத்து எழுதிய 'தண்ணீர் தேசம்' என்னும் நாவல்.
நாவலின் ஹீரோ கலைவண்ணன் பத்திரிக்கையாளன், எளிமையானவன். இவனது காதலி தமிழ் ரோஜா வசதிபடைத்தவள், மென்மையானவள். இருவருக்கும் மிடையேயான காதல் கடல் அலைகள் போல வசிகரிப்பவை.
கதையில் வரும் காதல்கர்களும், இசக்கி, சலீம், பாண்டி, பரதன் என நான்கு மீனவர்களும் 'ரொம்பபபப' நல்லவர்களாகவே படைக்கப்பட்டு இருக்கிறார்கள். வில்லன்கள் அவர்களது பயணித்த படகும், கடலும் , சூழலும் தான். அதுவும் இயற்கையானதுதான்.
சத்தமிட்டுக்கொண்டே இருக்கும் கடல் அதிசயத்தை தனது எழுத்தால் நம்மையும் கடலுக்குள் நாவலுக்குள் வலைப்போட்டு இழுத்து செல்கிறார் வைரமுத்து. பல திடுக் திருப்பங்களால் விறுவிறுவென வாசிக்க முடிகிறது.
'கடல் ஒரு வகையில் நம்பிக்கை; ஒரு வகையில் எச்சரிக்கை.' என்று தொடங்கியவர் 'கரை மீண்டால் இவர்கள் மீந்தின்னலாம்; கரை மீளாவிட்டால் இவர்களை மீன்தின்னும்' , நோய் என்பதொரு கொடை. தறிகெட்டோடும் வாழ்க்கையில் அது ஒரு மெல்லிய வேகத்தடை.' என சில நாவல் வரும் சின்ன சின்ன சிந்திக்க வைக்கும் பஞ்ச், சூப்பர்.
பிறந்ததில் இருந்தே சைவம் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த தமிழ்ரோஜா கடல் அளவு தண்ணீர் இருந்தும், தண்ணீர் தாகத்தை அடக்க ஆமை ரத்தம் குடிக்க கேட்பதும், கருவில் இருந்தே அசைவம் சாப்பிட்டு வளர்ந்த பாண்டி 'எலி' கொன்ற பாவத்திற்காக 'நான் இனி சைவம்' தான் என சொல்வது எல்லாமே நாவல் சுவாரசியத்திற்காக புரட்சிகரம் வடிவம் கொடுத்தாலும், நிஜத்தில் இதை எல்லாம் மனம் ஏற்க மறுக்கிறது.
இராயபுரம் கடலில் இருந்து வெறும் 45 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்கி தவித்த மீனவர்களை மீட்க ஏன் இரண்டு வாரம் ஆகிறது? அதுவும் சென்னை துறைமுகத்தில் இருந்து எட்டிப்பிடிக்கும் தூரத்தில் அல்லவா இருக்கிறது இவர்கள் மிதந்து தவித்த இடம். இவர்கள் மீன்பிடிக்க சென்ற பகுதி பல மீனவர்களும் மீன் பிடிக்க வரும் இடம் தானே. ஆனால், ஏதோ நடுக்கடலில் திசை தெரியாத வேறு நாட்டு கடற் பரப்பில் மாட்டிக்கொள்வது போல வலிந்து சித்தரிக்கப்பட்டு உள்ளது போல தோன்றுகிறது. ஆனால், கடல் சார்ந்து ஒரு கமர்சியல் படம் எடுக்க 'தண்ணீர் தேசம்' சிறந்த நாவல்.
தண்ணீர் தேசத்தால் தமிழ்ரோஜாவும், கலைவண்ணனும் நம் மனதில் எப்போதும் நிலைத்து நின்று இருப்பார்கள்.
வைரமுத்து பற்றிய முன்னுரை, சிறப்பு என எதுவாக இருந்தாலும் அதில் தமிழ் ஆதிக்கமே அதிகம் இருக்கும். அவர் தமிழ் கடலின் அடியில் கண்டு எடுக்கப்பட்ட முத்து. தமிழ்த் தாயின் செல்ல மகன். அவரின் மிகச்சிறந்த ஒரு விஞ்ஞான படைப்பே 'தண்ணீர் தேசம்'.
கடலெனும் சத்தமிடும் இரகசியம் சொல்லும் கதைகளை கடலோடு சென்று வென்று வருகிறது தண்ணீர் தேசம். தமிழ் காதலில் திளைத்து உயிர்க் காதலில் உருகும் கலைவண்ணன், உள்ளம் திருடும் கள்ளன். பயம் ஆட்கொண்டாலும் காதலனுடன் கடல் சென்று மன வலிமையை வளர்க்கும் தமிழ்ரோஜா, பெண்மையின் அடையாளம். ஒரு பெண்ணின் மன தைரியத்தை மனதுக்குளேயே ��ூட்டாமல் வெளிக்கொணர வேண்டிய அதிசயம் என உணர்த்தும் சம்பவங்கள் அருமை.
மீனவர்களோடு கடல் சென்று, படகு பழுதாகி, திசை தவறி பட்டினியோடும் வாடைக்காற்றோடும் போராடி, இறுதியில் புயலின் கோர அணைப்பும் சேர வெளவெளக்க வைக்கும் கதைக்களம். படகில் கடல் காண சென்ற காதலர்களின் கதி என்ன? மீனவர்களின் நிலை என்ன? மழையையும் பொருட்படுத்தாமல், காணாமல் போன மீனவர்களுக்காக கரையில் நடந்த போராட்டத்தின் முடிவு தான் என்ன?
பக்கங்கள் படபடத்த வேகமே, பறைசாற்றும் கதையின் சுவாரசியத்தை. கடல், தமிழ் இரண்டின் மேலும் நான் கொண்டுள்ள ஒப்பற்ற காதலுக்கு தலைவாழை விருந்து - தண்ணீர் தேசம். இப்புத்தகத்தை புரட்டிய ஒவ்வொரு நொடியும் நான் காதலை காதலால் காதல் செய்தேன்
நன்றாகத்தான் இருந்தது. பல இடங்களில் வரிகள் வலிந்து கவிதைப் படுத்தப் பட்டிருப்பது போல் பட்டது. இதற்குப் பின்பு அவர் எழுதிய புதினங்களில் இருக்கும் உரைநடையே இதைவிடப் பல மடங்கு வலிமையாக இருக்கிறது. இதிலிருக்கும் அறிவியல் சார்ந்த தகவல்கள் பற்றி நிறையப் பேர் பெருமையாகப் பேசுகிறார்கள். அதுவே இந்த அறிவியல் துணுக்குகளை வேறு இடங்களில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பவர்களுக்கு சலிப்பூட்டுவதாகவும் இருக்கலாம். எப்போதாவது வாசிப்போருக்கு மிகவும் பிடிக்கிற நூலாக இருக்கலாம். தீவிர வாசிப்புப் பழக்கம் உடையவர்கள் இதைப் பெரிதாகப் போற்றிப் புகழ வாய்ப்பு மிகக் குறைவே!
Happiness is reading the best book in your mother language. வைரமுத்து கவிப்பேரரசு, கவியரசு. ஒவ்வொரு பக்கமும் தேன்சுவை, வாழ்க்கைத் தத்துவங்கள். மறக்க முடியாத புத்தகமாக எனக்கு அமைந்தது. படிக்கும் உங்களுக்கும் அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.